பொது செய்தி

இந்தியா

இயற்கை அன்னையின் மடியில் 'வனமகன்' மோடி! காட்டில் சாகச பயணம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (51)
Advertisement
பயமறியாமல், காட்டில், சாகச, பயணம்

புதுடில்லி: டிஸ்கவரி சேனலின் 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பங்கேற்று பல்வேறு சாகசங்கள் நிகழ்த்தினார்.

வனம் மற்றும் மிருகங்கள் தொடர்பான நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் 'டிஸ்கவரி சேனலில்', 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சி பிரபலம். இதனை பிரிட்டனின் பியர்ஸ் கிரில்ஸ் தொகுத்து வழங்குகிறார். யாருமே இல்லாத அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்று, அங்குள்ள ஆபத்து, சவால்களை சமாளித்து உயிர் பிழைப்பது தான், இதன் முக்கிய அம்சம். இந்நிகழ்ச்சிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரதமர் மோடி இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றார். நேற்று இரவு 9 மணிக்கு இந்நிகழ்ச்சி உலகம்முழுவதும் ஒளிபரப்பானது.இயமலையில் ஹெலிகாப்டரில் பறந்து செல்கிறார் பியர்ஸ் கிரில்ஸ். உத்தரகண்ட்டின் ஜிம் கார்பெட் பூங்காவில் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது. இதற்கு பின் கிரில்ஸ், ஆறு கி.மீ., துாரம் நடந்து சென்று அந்த இடத்தை அடைகிறார்.
'உத்தரகண்ட்டில் உள்ள அடர்ந்த காட்டு பகுதியான ஜிம் கார்பெட் பூங்கா 520 சதுர கி.மீ., பரப்பளவு கொண்டது. இங்கு யானை, மான்கள், வங்க புலிகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் வாழ்கின்றன. 250 புலிகள் பாதுகாக்கப்படுகிறது' என கிரில்ஸ் கூறினார்.15 நிமிடங்களுக்குப்பின், மோடி காரில் வந்து இறங்குகிறார்.

மோடி: வெல்கம் கிரில்ஸ். நீங்கள் இந்தியாவுக்கு இப்போது தான் வருகிறீர்களா?

பியர்ஸ்: இல்லை எனது 18 வயதில் வந்துள்ளேன். இமயமலை மற்றும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறியுள்ளேன்.

மோடி: இப்பயணம் நன்றாக உள்ளது. இந்த பூங்கா ஒரு சிறந்த சுற்றுலாப்பகுதி. இங்கு நதி காடுகள், தாவரங்கள் என பார்க்க வேண்டிய இடங்கள்அதிகம் உள்ளன. இந்தியா என்பது ஒரு பன்முக நாடு. 100 மொழிகள் 1100 வட்டார மொழிகள் உள்ளன.

பியர்ஸ்: இடி இடிக்கிறதேு. உடனே இதுவும் ஒரு மொழி தானே. இப்பகுதி ஆபத்தான இடம். வன விலங்குகள் உள்ளன. இங்கு சுற்றுலா வருபவர்கள் வாகனங்களை விட்டு இறங்கவே மாட்டார்கள். நாம் தற்போது ஒரு சாகச பயணத்துக்கு செல்கிறோம்.

மோடி: இந்த இடம் ஒன்று ஆபத்தானது இல்லை. இயற்கையை ஒன்றி சென்றால் ஆபத்து இல்லை. வன விலங்குகள் கூட நமக்கு நல்லது தான்செய்யும்

பியர்ஸ்: உங்களது பள்ளி பருவத்தை பற்றி கூறுங்களேன்.

மோடி: எனது சொந்த ஊர் குஜராத்தில் உள்ள வாத்நகர். அங்கு தான் நான் படித்தேன். அங்கிருந்து தான், எனது சமூக சேவையை தொடங்கினேன். எங்களது குடும்பம் ஏழ்மையானது. சிறிய வீட்டில் தான் வசித்தோம். அரசு பள்ளியில் தான் படித்தேன். இயற்கையோடு ஒன்றிதான் எனது வாழ்க்கை இருந்தது.

எனது குடும்பம் வசதியானது இல்லை. இதனால் அழுக்கு துணி சகஜம் தான். ஆனால் நான் பள்ளிக்கு போகும் போது, நேர்த்தியாக தான் செல்வேன். பள்ளி சீருடையை, அடுப்புகரி பயன்படுத்தி 'அயர்ன்' செய்துதான் அணிந்து செல்வேன்.

பியர்ஸ்: நீங்கள் நல்ல ஒரு மாணவர் என சொல்லுங்கள்.
மோடி: படிப்பில் நான் அவ்வளது சிறப்பானவன் என சொல்ல முடியாது. பள்ளி நேரம் தவிர டீக்கடை வைத்திருந்த எனது தந்தைக்கு உதவி செய்தேன். ரயில் நிலையத்தில் டீ விற்பனை செய்தேன். இதனை என் வாழ்வில் மறக்கவே முடியாது.காட்டில் கிடந்த யானை கழிவை இருவரும் பார்த்தனர். அதனை பியர்ஸ் பிழிந்து குடித்தார்.

பியர்ஸ்: இங்கிருக்கும் புலிகள் மறைந்திருந்து தாக்கககூடியது. 3 மீட்டர் அளவுக்கு நீளமான புலிகள் இங்கு உள்ளன. இங்கு நாம் தான் நம்மைபாதுகாத்துக்கொள்ள வேண்டும். இதற்கு முக்கியமான ஆயுதம் ஒன்று தேவைப்படுகிறது.ஜிம் கார்பெட் என்பவர் ஒரு இயற்கை மற்றும் வனவிலங்குகளுக்காக தன்னை அர்பணித்தவர். இங்கு புலிகள் 150 பேரை கொன்றுள்ளது என அவர் கூறியிருக்கிறார். ஆனால் அவரே தான் இங்கு புலிகளை காக்கவும் முயற்சி செய்தவர்.சிறிய மரக்குச்சி மற்றும் கத்தியை வைத்து ஆயுதம் செய்தார் பியர்ஸ்.

மோடி: எனது 17 வயதில் வாழ்க்கையின் தேடலுக் காக இமயமலைக்கு சென்றேன். அதன்பின் பலமுறை அங்கு சென்றுள்ளேன். சாதுக்களை சந்தித்துள்ளேன். இந்த அனுபவம் எனது வாழ்க்கைக்கு இன்றும் உதவுகிறது -

பியர்ஸ்: காடுகளில் பயணிக்கும் போது, கால் பாதத்தை விட்டு விடுங்கள். நினைவுகளை மட்டும் எடுத்துசெல்லுங்கள் என்று சொல்வார்கள்.ஆபத்து வந்தால் தற்காத்துக்கொள்ளுங்கள் என்று மோடியிடம் தான் தயாரித்த ஆயுதத்தை வழங்கினார் பியர்ஸ். பின் அடர்ந்த வனப்பகுதிகள் நதியை இருவரும் சென்றனர். மான்கள் செல்வதை காண முடிந்தது.

பியர்ஸ்: நதியின் சத்தம் கேட்கிறது. நதியை அடைந்து விட்டோம். யானைகள் செல்வதை பார்க்க முடிகிறது. காட்டில் புலியை பார்த்தால் நான் உங்களை விட வேகமாக ஓடுவேன்.இருவரும் நதியை அடைந்தனர்.

பியர்ஸ்: நீங்கள் எந்த வயதில் பிரதமராக ஆவீர்கள் என நினைத்தீர்கள்?
மோடி: நான் முதலில் குஜராத் மாநில முதல்வராக 13 ஆண்டுகள் இருந்தேன். பின் இந்தியாவை ஆள நாட்டு மக்கள் என்னை முடிவெடுத்தால், தற்போது ஐந்து ஆண்டுகளாக பிரதமராக இருக்கிறேன். தற்போது 18 ஆண்டுகளுக்குப்பின், எனக்கு பிடித்த இடத்துக்கு (காடு) வந்துள்ளேன். மக்களின் கனவுகளை நனவாக்குவதில் தான் எனக்கு மகிழ்ச்சி. எனது தாய்க்கு வயது 97. இன்றும்அவரது வேலையை அவரே செய்து கொள்கிறார்.காட்டில் உள்ள நாணல் மற்றும் கம்புகளை வைத்து படகு ஒன்றை பியர்ஸ் செய்தார்.

பியர்ஸ்: இந்த நதியில் நிறைய முதலைகள் உள்ளன.நீங்கள் உங்கள் அனுபவத்தில் ஏதாவது முதலையை பார்த்துள்ளீர்களா?

மோடி: சிறுவயதில் குளத்தில் குளித்தேன். அங்கு அந்தவசதி தான் இருந்தது. ஒருநாள் குளத்தில் இருந்த சிறிய முதலை குட்டியை வீட்டுக்கு கொண்டுவந்தேன். 'இது பாவம்' என தாய் திட்டியதால் குளத்தில் போய் விட்டு விட்டேன்.சிறுவயதில் நிதிநிலையால் நிறைய கஷ்டப்பட்டோம். ஆனால் அப்போது எனது தந்தை நிறைய அஞ்சல் அட்டைகளை வாங்கி வருவார். ஊரில் மழை பெய்து விட்டால், அதனை எங்களது உறவினர்களுக்கு கடிதம் மூலம் தெரியபடுத்தினார்.

அப்போது எனக்கு புரியவில்லை. தற்போதுதான் மழை எவ்வளவு முக்கியம் என்று தெரிகிறது.எனது பாட்டி மற்றும் தாய் படிக்கவில்லை. நிதிநிலையால் கஷ்டப்பட்டதால் எனது மாமாவுக்கு ஒரு யோசனை வந்தது. சமையலுக்கான விறகு வாங்கி விற்கலாம் என்ற தனது முடிவை, என் பாட்டியிடம் தெரிவித்தார்.ஆனால் மரங்களை வெட்டுவது தப்பு. மரங்கள் இல்லாமல் நாம் இல்லை என்று கூறி மாமாவின் யோசனைக்கு பாட்டி மறுப்பு தெரிவித்து விட்டார்.

பியர்ஸ்: உங்களுக்கு முடிவுகளை எடுக்கும் போது பயம் இருக்காதா.
மோடி: நான் வாழ்க்கையில் பயத்தை எதிர்கொண்டதே இல்லை. பயம் என்றால் என்ன என்றே எனக்கு தெரியாது. எதையும் நேர்மறை எண்ணத்துடன் தான் அணுகினேன். வாழ்க்கையை முழுமையாக பார்க்க வேண்டும். உயர்வு, தாழ்வு வரும். கீழே செல்வதை நினைத்து பயப்படக்கூடாது.
பியர்ஸ்: என்னிடம் ஒரு திட்டம் உள்ளது. இந்த நாணல் படகு மூலம் இந்த நதியை கடக்க வேண்டும். இந்த படகை நான் சோதனை செய்யவே இல்லை. இந்த இமயமலை நதி மிகவும் குளிராக உள்ளது.பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மற்றும் விமானத்தில் தான் செல்வார். ஆனால் இன்று இந்த படகில் செல்ல உள்ளார். -மழை பெய்து கொண்டு இருந்தது.

பியர்ஸ்: இது போன்ற படகில் செல்லும் முதல் இந்திய பிரதமர் நீங்கள் தான்.

மோடி: எனது சின்ன வயதில் இது சாதாரணம். எனது இமயமலை பயணத்தில் நிறைய இதுபோன்ற சூழலை சந்தித்துள்ளேன். நதியை கடந்து விட்டனர்.

பியர்ஸ்: சூப்பர் சார். இது வேப்ப இலை.வெந்நீரில் வேப்ப இலையை போட்டு குடித்தனர்.
மோடி: எங்கள் நாட்டில் மரத்தையும் கடவுளாக தான் பார்க்கிறோம். துளசி கல்யாணம் பாரம்பரியம் உள்ளது. துளசி இலையில் திருமணம் செய்து வைப்போம். சுற்றுச்சூழலை காக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. நம் சந்தோஷத்துக்காக காடுகளை அழிக்க ஆரம்பித்து விட்டோம். நாட்டை வெளியில் இருந்து யாரும் சுத்தம் செய்ய முடியாது. காந்தி நிறைய செய்திருக்கிறார். விரைவில் இந்தியா சுத்தமாகி விடும்.
இயற்கையோடஒன்றி அல்லது ஒன்றாமல் இருப்பது ஒருவரது தனிப்பபட்ட விருப்பம். ஆனால் நீர், வனத்தை ஏன் அழித்தீர்கள் என எதிர்காலத்தில் அவர்களது பிள்ளைகள் கேட்கும் நிலை ஏற்படக்கூடாது.
இது ஒரு நல்ல அனுபவம் இயற்கையை அனுபவக்க வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவை பார்க்க ஆசைப்படுவார்கள். இந்தியா ஒரு சிறந்த சுற்றுலா நாடு. வெளிநாட்டு பயணிகள் நிறைய பார்க்க வருவார்கள்.

பியர்ஸ்: மறுபடியும் பத்திரமாக பாதுகாவலர்களிடம் உங்களை சேர்த்து விடுகிறன். நன்றி சார். மோடி: இன்றைய நாள் நன்றாக இருந்தது. நர்மதா நதியோடு தான் என் வாழ்க்கையை செலவழித்துள்ளேன். யோகாவை கற்று வருகிறேன். சிறு வயது போல இன்று நான் சந்தோஷமாக இருக்கிறேன்.

பியர்ஸ்: நனைந்த ஆடையை எப்படி காய வைக்க போகீறீர்கள்?

மோடி: போற போக்குல நுாறு வழி இருக்கு.

பியர்ஸ்: மொத்த உலகமும் இணைந்து பூமியை பாதுகாக்க வேண்டும். இந்தியாவை பற்றி நல்ல எண்ணத்தை மோடி ஏற்படுத்தினார்.


'டுவிட்டரில்' அழைப்புபிரதமர் மோடி வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில் 'இந்திய காடுகளின் பசுமை இயற்கை அன்னையின் செழுமைக்கு மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான அம்சங்களை கொண்டுள்ள 'மேன் வெர்சஸ் வைல்ட்' நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் அனைவரும் பாருங்கள்' என தெரிவித்தார். இதற்கு ஏற்ப உலகம் முழுவதும் ஏராளமானோர் கண்டு களித்தனர்.நிகழ்ச்சியாளர் பியர் கிரில்ஸ் 'இந்த பூமியை பாதுகாப்போம்; அமைதியை மேம்படுத்துவோம்' என 'டுவிட்டரில்' கூறினார். இந்த நிகழ்ச்சி டிஸ்கவரி 'டிவி'யின் 12 சேனல்களில் 180 நாடுகளில் ஒளிபரப்பானது.


பியர்ஸ் கிரில்ஸ் யார்காடுகள், விலங்குகள் தொடர்பான சாகச நிகழ்ச்சிகளை நடத்துவதில் புகழ் பெற்றவர் பியர் கிரில்ஸ். சாகச வீரர், விமானப்படை வீரர், எழுத்தாளர், தொழிலபதிபர், 'டிவி' நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முக திறன் கொண்டவர்.
1974 ஜூன் 7ல் லண்டனில் பிறந்தார். பட்டப்படிப்பு முடித்துள்ளார். இவரது கொள்ளு தாத்தா மற்றும் தாத்தா கிரிக்கெட் வீரர்கள். இவரது தந்தை மைக்கேல் கிரில்ஸ் ஒரு அரசியல்வாதி. கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார். ஆங்கிலம், ஸ்பானிஷ், பிரெஞ்ச் மொழிகளில் திறமை பெற்றவர். இமயமலைப்பகுதிகளில் பயிற்சி பெற்ற இவர், 1998ல் எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்தார்.

'ஜெட் ஸ்கைஸ்' எனப்படும் நீர்ச்சறுக்கு படகு போட்டியில் பங்கேற்று, பிரிட்டன் ராணுவத்துக்கு நிதி சேகரித்தார். அண்டார்டிகா பனிப்பிரதேசத்தில் சாகசங்களை நிகழ்த்தியுள்ளார். 2006ல் இருந்து 'மேன் வெர்சஸ் வைல்டு' நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-ஆக-201918:49:09 IST Report Abuse
ஆப்பு இவிங்க எடுக்கற செல்ஃபி யெல்லாம் பாக்கச்சே பெரிய விளம்பரப் படம் தான்னு தெரியுது. ரெண்டு பேருக்கும் நல்ல விளம்பரம்.
Rate this:
Share this comment
Cancel
Yezdi K Damo - Chennai,இந்தியா
13-ஆக-201913:39:58 IST Report Abuse
Yezdi K Damo ஏதோ தமிழ் சினிமா பாக்கிறமாதி இருந்திச்சி ரொம்ப மொக்கையா .
Rate this:
Share this comment
யுவான்சுவாங்ஆமக்கறி சாப்பிட்டிருந்தா கைதட்டி விசிலடிச்சுட்டே பாத்துருப்பீங்க போல?...
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
13-ஆக-201914:39:59 IST Report Abuse
Chowkidar NandaIndiaஅவர் ஏதோ இயற்கையோடு வாழும் வழிமுறை பற்றி சொல்லவர இவரென்னமோ அவெஞ்சர்ஸ் எண்டு கேம் லெவெலுக்கு எதிர்பார்த்திருக்கிறார் போலிருக்கிறது....
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
13-ஆக-201913:36:41 IST Report Abuse
RM We are the family who spend their whole life in Indian military and navy for the last four generations to till date.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X