பொது செய்தி

தமிழ்நாடு

சமுத்திரம் ஏரியில் புறவழிச்சாலை விரிவாக்கம்; நிறுத்த கோரிக்கை

Added : ஆக 13, 2019
Advertisement

தஞ்சாவூர்: தஞ்சாவூரில், 242 ஏக்கர் பரப்பிலான சமுத்திரம் ஏரியில், புறவழிச் சாலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர், புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் அருகே, 242 ஏக்கரில், சமுத்திரம் ஏரி உள்ளது. சோழர்கள் காலத்தில் வெட்டப்பட்ட இந்த ஏரியில், தண்ணீர் தேங்கியிருந்தால், கடல் போல காட்சியளிக்கும் என்பதால், இதற்கு, 'சமுத்திரம் ஏரி' என, பெயரிடப்பட்டது.தற்போது, ஏரியின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஏரியின் உள்ளேயே, 40 ஏக்கர் பரப்பில், தஞ்சாவூர் மாநகராட்சியின் பாதாள சாக்கடை சுத்திகரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது.தற்போது, மீதியுள்ள, 200 ஏக்கரிலும் கூட, முழுமையாக தண்ணீரை தேக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த, 1995ல், தஞ்சாவூரில், புறவழிச்சாலை அமைக்கப்பட்டபோது, இந்த ஏரியின் நடுவில், சாலை அமைக்கப்பட்டது. அதன் பின், இந்த ஏரியில், பல்வேறு ஆக்கிரமிப்புகள் முளைத்தன. இந்நிலையில் தற்போது, தஞ்சாவூர் கும்பகோணம் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, ஏற்கனவே, சமுத்திரம் ஏரியின் நடுவே இருந்த சாலையை, மேலும், 100 அடிக்கு அகலப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: ஏரி, குளங்களை, மன்னர்கள் வெட்டியதன் நோக்கமே மாறி விட்டது. ஆக்கிரமிப்புகளால், நீர்நிலைகளின் பரப்பு குறுகி வருகிறது.இந்த சமுத்திரம் ஏரி, ஏற்கனவே குறுகி உள்ளது. எனவே, ஏரிக்குள் சாலை அமைப்பதை, அரசு கைவிட வேண்டும். இதைப் பயன்படுத்தி, தனி நபர்கள், திருட்டுத் தனமாக மண் அள்ளிச் செல்கின்றனர். இந்த ஏரி முழுவதையும் தூய்மைப்படுத்தி, தண்ணீரை தேக்கினால், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.எனவே, இந்த ஏரி மட்டும் அல்ல, தமிழகத்தில் உள்ள அனைத்து ஏரி, குளங்களையும் பாதுகாக்க, நீதிபதிகள் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

சுற்றுலா மேம்பாட்டு திட்டம்? இந்த ஏரிக்கரையில், சிறுவர்களுக்கான பூங்கா அமைத்து, 1 கி.மீ.,க்கு நடைபாதை அமைப்பதுடன், படகு சவாரி வசதியை ஏற்படுத்துவதற்காக, 1.50 கோடி ரூபாயில், திட்டம் தீட்டப்பட்டு, 2012ல் பூமி பூஜையும் நடைபெற்றது. தொடக்கத்தில் வேகமாக துவங்கிய இந்தப் பணி, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X