பொது செய்தி

இந்தியா

ரூ.45 ஆயிரம் கோடிக்கு ஜி.எஸ்.டி முறைகேடு

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (28)
Share
Advertisement

புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் 2018-19 பல்வேறு நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியை முறையாக செலுத்தாமல் பல குளறுபடிகள் மூலம் ரூ.45 ஆயிரம் கோடி வரை ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



latest tamil news




நாடு முழுவதும் ஒரே வரி என்ற முறைப்படி மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை என்ற புதிய வரியை அறிமுகம் செய்தது. இந்த வரிக்கு பல்வேறு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மத்திய அரசு கடும் நடவடிக்கையாக இந்த வரி சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. இந்த வரி வரம்பிற்குள் வருவதற்கு தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் சற்று சுணக்கம் காட்டியது.

ஜி.எஸ்.டி வரியை செலுத்தாமல் எத்தனித்து வருவது குறித்து நிதி துறை அமைச்சகம் ஒரு சிறப்பு பிரிவை அமைத்தது. இந்த பிரிவு நடத்திய ஆய்வு மற்றும் ரெய்டு மூலம் நாடு முழுவதும் ரூ. ரூ.45 ஆயிரம் கோடி வரை ஏய்ப்பு செய்துள்ளதாக
கண்டறியப்பட்டுள்ளது.


37 ஆயிரம் வழக்குகள்



போலி ரசீதுகள் தயாரித்ததன் மூலம் 8 ஆயிரம் கோடிக்கு ஜிஎஸ்டி எத்தனிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக 2 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இது போன்று செயல்பட்ட நிறுவனங்களிடம் இருந்து ரூ.736 கோடியை வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.


latest tamil news



தற்போதைய நிதி ஆண்டில் ஜி.எஸ்.டி முறைகேடு நடத்திய நிறுவனங்களில் மொத்தம் இதுவரை 37 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன. நிதி அமைச்சக தகவலின்படி ரூ. 25 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரியாக மீட்கபட்டுள்ளன. மொத்தம் ரூ.45 ஆயிரம் கோடி வரை ஏய்ப்பு நடந்துள்ளது . இது தொடர்பாக 37 ஆயிரம் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.



பொதுவாக வரி ஏய்ப்பை கண்டுபிடிப்பதில் வரித்துறையினர் மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
13-ஆக-201922:34:11 IST Report Abuse
J.Isaac தமிழ் மைந்தன் அவர்களே நான் லாரி புக்கிங் அலுவலத்தில் உள்ள அனுபவத்தை வைத்து சொல்லுகிறேன் . கோவை மட்டும் அல்ல , மதுரை திருச்சி சேலம் சென்னை போன்ற நகரங்களிலும் வணிக வரித்துறை அதிகரிகளின் ஆசியோடு கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக மார்வாடிகளின் வரி ஏய்ப்பு கொஞ்சம் அல்ல பெரிய வல்லுநர்கள் . Nk / ஜெர்மனி வெளிநாட்டில் இருந்து முட்டாள் தனமாக கருத்து எழுதக்கூடாது . இங்கு உள்ள உண்மை நிலவரம் தெரியுமா ?
Rate this:
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி அதென்ன வந்தேரிகள். தமிழகத்தில் குஜராத்தி இல்லாத ஊரை பார்க்க முடியுமா. கிராமமானாலும் சரி பெரிய ஊராக இருந்தாலும் சரி மார்வாடிகள் முதலில் வந்து வட்டிகடையை வைத்து தமிழர்களின் அவசர பணத்தேவையை நிறைவு செய்கின்றனர். டாஸ்மாக் தமிழர்கள் போகாத மார்வாடி கடையே கிடையாது. சுமார் ஐம்பது அறுபது வருடத்திற்கு முன் எடுக்கப்பட்ட சினிமாவில் கூட இவர்களை பார்க்கலாம். மிகுந்த உழைப்பாளிகள். வியாபாரத்திற்காக பிறவி எடுத்தவர்கள். எப்படி தீயசக்திகள் ஊழல் செய்வதற்காக பிறந்தது போல. அந்த வந்தேரிகளை நம்பித்தான் பல தமிழ் குடும்பங்கள் பிழைக்கின்றன என்பதை மறுக்க முடியாது.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
13-ஆக-201917:57:57 IST Report Abuse
தமிழ் மைந்தன் கோயமுத்தூரில் வந்தேரிகள் அதிகமே.........ஆனால் ஏமாற்றுதல் குறைவு........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X