பொது செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை திறப்பு

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (32)
Share
Advertisement
அணை, நீர்மட்டம்,  100 அடி, பொதுப்பணிதுறை, அதிகாரிகள் காவிரி நீர், பூஜை,

மேட்டூர்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, இன்று(ஆக.,13) டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் இ.பி.எஸ்., அணையை திறந்து வைத்து மலர் தூவினார். காலை 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், மாலையில் 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதி, நெற்களஞ்சியமாக விளங்க, மேட்டூர் அணை நீர் பாசனம், முக்கிய ஆதாரமாக உள்ளது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.


காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து சுமார் 2 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் மேட்டூர் அணையை வந்தடைந்துள்ளது. மொத்தம் 120 அடி உயரமுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் 104 அடியை தொட்டுள்ள நிலையில், அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக செவ்வாயன்று தண்ணீர் திறக்கப்பட்டது. முதல்வர் பழனிசாமி, அணையின் மதகுகளை இயக்கி  தண்ணீரை திறந்துவிட்டார். சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கால்வாய் பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது பேசிய முதல்வர், விவசாயத்திற்குதேவையான தண்ணீர் திறக்கப்படும் என்றார். வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் திறக்கப்பட்டுள்ள தண்ணீர், படிப்படியாக 10 ஆயிரம் கனஅடி வரை அதிகரிக்கப்படும். இதன் மூலம் 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணைமின்நிலையம், சுரங்க மின்நிலையம் மற்றும் 7 கதவணை மின் நிலையங்கள் மூலம்  4600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகளும் தொடங்கியுள்ளது. முன்னதாக, மேட்டூர் அணை திறப்பு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் அதிமுக அரசால் நிறைவேற்றப்படும்; மேட்டூர் , கொள்ளிடம் இடையே 3 தடுப்பணைகள் கட்டப்படும்; சேலம் தலைவாசல் பகுதியில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்றார்.

latest tamil news

இந்நிலையில் இன்று ( ஆக. 13) காலை மேட்டூர் அணை நீர் மட்டம் 100 அடியை கடந்தது. இதன் மூலம் 65-வது முறையாக 100 அடியை கடந்தது. அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து பொதுப்பணிதுறை அதிகாரிகள் காவிரி நீருக்கு பூஜை செய்தனர்.


latest tamil news
டெல்டா பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணையை முதல்வர் இபிஎஸ் திறந்து வைத்தார். தற்போது 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மாலை பத்தாயிரம் கன அடி வரை உயர்த்தப்பட்டது.


latest tamil news
இதன் இடையே, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து 2 லட்சம் கன அடியாக குறைந்தது. தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டுள்ளதால், அணையின் நீர்மட்டம் 105.64 அடியாக இருந்தது.

Advertisement
வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
13-ஆக-201922:12:49 IST Report Abuse
Rajagopal எங்களுக்கு நீர் வேண்டும் போது திறந்து விட மாட்டேனென்கிறார்கள். நீர் வேண்டாதபோது திறந்து விடுவேன் என்கிறார்கள். தமிழகத்தை வெள்ளத்தில் மூழ்கடிக்க பாஜகவின் திட்டமிட்ட சதி என்பதைத் தமிழர்கள் பகுத்தறிவால் அறிகிறார்கள். மேட்டூர் அணையைத் திறந்து விட்டு அதன் மூலமாக சமிஸ்கிருதத்தை நம் மீதுத் திணிக்கப் பார்க்கிறார்கள். இதை எல்லா அறிவார்ந்தத் தமிழர்களும் எதிர்ப்போம்.
Rate this:
Cancel
13-ஆக-201919:23:51 IST Report Abuse
ஆப்பு பைப்ப தொறந்துவிட இவர்தான் போவாரு. மதகு ஒடைஞ்சா ஈ.பி.எஸ் போவாரு.
Rate this:
Jaya Ram - madurai,இந்தியா
14-ஆக-201911:44:23 IST Report Abuse
Jaya Ramஏனப்பா நீங்கள் போகவேண்டியதுதானே, அவர்களுக்கு வேலைகளை பிரித்துக்கொண்டு பார்க்கிறார்கள் எப்படியாவது வேலை நடக்கிறதா இல்லையா ? ஆனால் இந்நாட்டில் உள்ளவனுக்கு உள்ள குசும்பு வேறெந்த நாட்டுக்காரனுக்கும் கிடையாது, ஏதாவது ஒரு வேலையினை குறை ஏற்படாதவாறு செய்து விட்டால் உடனே அடுத்த பிரச்சினைக்கு தாவி இது நடந்ததா என கேட்பது என்னமோ இவர்கள் மண்வெட்டி எடுத்து வேலைசெய்து களைத்துவிட்ட மாதிரி அந்தக்காலத்தில் திண்ணை பேச்சு வீரர்கள் என்பார்கள் அது இவர்கள் பற்றித்தானோ...
Rate this:
Cancel
jagan - Chennai,இந்தியா
13-ஆக-201917:27:58 IST Report Abuse
jagan சூப்பர்....கர்நாடக நண்பர்கள், எப்பவும் தண்ணீர் தர தயங்குவதே இல்ல...அவர்கள் ஒரே நாடு என்று இருக்கிறார்கள்....இந்த முறையாவது தண்ணீர் பஞ்சத்தில் புத்தி வந்திருந்தால் நல்லது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X