கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க முறையீடு

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (49)
Share
Advertisement
அத்திவரதர், வைபவம், தரிசனம், சென்னை ஐகோர்ட்

சென்னை: அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் முறையிடப்பட்டது. இதனை மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என கோர்ட் கூறியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜர் கோவிலில் நடைபெறும் அத்தி வரதர் வைபத்திற்கு, ஜூலை, 1ம் தேதி முதல் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். முதலில் சயன கோலத்தில் அருள் பாலித்த அத்திவரதர்,கடந்த ஆக., 1 முதல் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்., தினமும், லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, சுவாமியை தரிசிக்கின்றனர். வரும் 16ம் தேதியோடு அத்திவரதர் தரிசனம் முடிகிறது. அனந்தசரஸ் குளத்திற்கு, அத்தி வரதரை எடுத்துச் செல்ல, 17ம் தேதி ஏற்பாடு செய்யப்படும். பக்தர்கள் தரிசனம் செய்ய, 16ம் தேதி கடைசி நாளாகும்.

latest tamil news

இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த 78 வயதான தமிழரசி என்பவர் தாக்கல் செய்த மனு: அத்திவரதர் வைபவம் முடிய குறைவான நாட்களே உள்ளன. லட்சகணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இன்னும் லட்சகணக்கான பக்தர்கள் தரிசிக்க வேண்டியுள்ளதால், அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என முறையிட்டார். இதனை கேட்ட நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, இதனை மனுவாக தாக்கல் செய்தால், விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனக்கூறியுள்ளது.

Advertisement

வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
13-ஆக-201921:51:17 IST Report Abuse
அம்பி ஐயர் அத்தி வரதரை குளத்தில் மறைத்து வைத்தால்..... அடுத்த நாற்பது ஆண்டுகளுக்குல்..... அது கூடத் தேவை இல்லை.... நாலு நாள் கூடப் போதும்.... அத்தி வரதர் சிலை மாயமாகிவிடுவார்..... சிலை கடத்தல் பேர்வழிகள் அத்தியைக் கடத்தி பல கோடிகளுக்கு விற்றுவிடுவார்கள்.... அடுத்து நாற்பது ஆண்டுகள் கழித்துத் தானே..... அப்போது சமாளித்துக் கொள்ளலாம் ...
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஆக-201921:42:32 IST Report Abuse
தமிழ்வேள் இந்த அத்திவரதர் வைபவத்தை சொதப்பியது காஞ்சி மாவட்ட நிர்வாகம் அறநிலையத்துறை மற்றும் திராவிட தமிழக அரசு ஆகியவை இன்றைய தினம் சமூக ஊடகங்களது வீச்சு அரசுக்கு தெரியும் அதிகபட்ச பக்தர்கள் வருகை இருக்கும் என்பதும் தெரியும் வீண் வீம்புக்காக ஏற்பாடுகளை ஒழுங்காக செய்யாமல் சொதப்பியது இவர்கள்தான் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை தொடர்புகொண்டு நாற்பத்தெட்டு நாட்களுக்கு கூட்டத்தை சமாளிக்க வரைவு திட்டம் தேவை என்று சொல்லியிருந்தால் அவர்கள் மிக அழகாக அமைத்துக்கொடுத்திருப்பார்கள் எந்த பிரச்சனையும் இன்றி வைபவம் நடந்துகொண்டிருக்கும் ஆனால் வறட்டு கவுரவத்துக்கு தாறுமாறாக வேலை பார்த்தது தமிழக அரசு இவர்களுக்கு CROWD MANAGEMENT பற்றி துளிகூட தெரியாது கடசி கூட்டங்களுக்கு சிறப்பு [ திருட்டு ] பஸ் இயக்குதல் கொக்கி போட்டு மின்சாரம் திருடுதல் கூடுதலாக டாஸ்மாக் கடையில் வியாபாரம் பார்த்தல் தவிர வேறு எதற்கும் லாயக்கற்ற அரசு இந்த தமிழக திராவிஷர்களின் அரசு வெட்கக்கேடு வாஸ்தவத்தில் அத்திவரதர் இவர்கள் மீது கோபம்கொண்டு சாபம் தந்திருக்கவேண்டும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
13-ஆக-201921:33:07 IST Report Abuse

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X