காஷ்மீர் விவகாரத்தில் டிரம்ப் தலையீடு இல்லை

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (30)
Share
Advertisement
Trump, Kashmir Mediation,India, US Envoy,Donald Trump, Kashmir, Trump, காஷ்மீர்,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப், தூதர்

வாஷிங்டன்: காஷ்மீர் விவகாரத்தில் தலையிடும் திட்டம் தொடர்ந்து தனது பரிசீலனையில் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெளிவுபடுத்தி விட்டதாக, இந்திய தூதர் கூறியுள்ளார்.


அமெரிக்க கொள்கை


இது குறித்து அமெரிக்காவிற்கான இந்திய தூதர் ஹர்ஷ் வர்தன் சிரிங்கலா, டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டி:
காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவது கிடையாது என்பது அமெரிக்காவின் நீண்ட கால கொள்கை. ஆனால், பிரச்னைகளை தீர்க்க இந்தியா பாகிஸ்தான் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பதை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது. இந்தியா , பாகிஸ்தான் நாடுகள் ஏற்று கொண்டால் மட்டுமே, காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்வேன் என டிரம்ப் தெளிவாக கூறினார். தற்போது, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தை இந்தியா நிராகரித்து விட்டதால், அந்த திட்டம் தொடர்ந்து பரிசீலனையில் இல்லை என்பதை டிரம்ப் தெளிவுபடுத்திவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news





இந்தியா நிராகரிப்பு

கடந்த ஜூலை 22 ம் தேதி, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், வாஷிங்டன்னில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார்.
இதன் பின்னர் டிரம்ப் நிருபர்களிடம் கூறுகையில், காஷ்மீர் விவகாரத்தில், தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என மோடி கூறியதாக தெரிவித்தார்.ஆனால், இதனை மறுத்த இந்தியா, மோடி, அவ்வாறு எந்த கோரிக்கையும் விடவில்லை. இந்தியா பாகிஸ்தான் இடையிலான பிரச்னை, இரு நாடுகளும் பேசி தீர்த்து கொள்ளப்படும் எனக்கூறியது.இதன் பின்னர், டிரம்ப், இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் விரும்பினால், மட்டுமே காஷ்மீர் விவகாரத்தில் தலையிடுவேன் என கூறியிருந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஆக-201907:21:45 IST Report Abuse
ஆப்பு ஏன் தலையிடணும்? அதான் 50000 கோடிக்கு அப்பாச்சி எலிகாப்டர்கள் ஆர்டர் குடுத்தாச்சே...ரஷ்யாவும் அம்பேல். ப்ரான்ஸ் 36000 கோடி...மூச்... சீனாவுக்கு அப்பப்போ போய் டீ குடிச்சிட்டு சிலை ஆர்டர் குடுத்தாப் போறும் அடங்கிருவான்.
Rate this:
Cancel
thulakol - coimbatore,இந்தியா
13-ஆக-201921:54:13 IST Report Abuse
thulakol இதனை வருடங்களை இதை கான்செல் செய்யாமல் இருந்தது காங்கிரஸ் செய்த தப்பு
Rate this:
Cancel
chails ahamad - doha,கத்தார்
13-ஆக-201920:22:22 IST Report Abuse
chails ahamad காஷ்மீரின் விசேட அதிகாரம் 370 என்பதை மனம் போக்கில் ரத்து செய்வது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லை , அந்த மாநில மக்களின் ஒப்புதல் இல்லாமல் எதையும் எடுத்தேன் , கவிழ்த்தேன் என செயல்படும் ஆட்சியாளர்கள், இடுக்கில் தலையை இட்டு கொண்டுள்ளார்கள் என்பதை காலங்கள் நிருபிக்கும் சற்று பொருத்து இருங்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X