மக்களை துப்பாக்கி இல்லாமல் சந்திப்போம்: தளபதி| Army chief says forces have good terms with Kashmiris, hope to meet without guns | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மக்களை துப்பாக்கி இல்லாமல் சந்திப்போம்: தளபதி

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (9)
Share
Army chief, force, Kashmiris,  guns, காஷ்மீர், ராணுவ தளபதி, மக்கள், பிபின் ராவத்,

புதுடில்லி: காஷ்மீர் மக்களை, துப்பாக்கி இல்லாமல் சந்திக்க ராணுவம் விரும்புகிறது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு நாடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது வழக்கம். இதனைப் பற்றி கவலைப்பட தேவையில்லை. பாகிஸ்தானின் எந்த நடவடிக்கையையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. முந்தைய காலங்களில், காஷ்மீர் மக்களுடன் நாம் சுமூகமாக பேசினோம். 70 மற்றும் 80 ம் ஆண்டுகளில் துப்பாக்கி இல்லாமல் அவர்களை சந்தித்தோம். வரும் காலங்களிலும் இது தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil newsகாஷ்மீர் மாநில முதன்மை செயலர் ரோதிக் கன்சால் கூறுகையில், மாநிலத்தில் முழு அமைதி நிலவுகிறது. அசம்பாவிதம் இல்லை. காஷ்மீரில் அனைத்து சாலைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. மக்களுக்கு தேவையான மருத்துவ வசதி அளிக்கப்பட்டு வருகிறது . சுகாதார அதிகாரிகள் மற்றும் அனைத்து துறையினரும் விழிப்போடு செயல்பட்டு வருகின்றனர். ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் சுதந்திரதினம் உற்சாகமாக கொண்டாடப்படும். பக்ரீத் பண்டிகை, ஜம்மு, காஷ்மீர், லடாக்கில் அமைதியாக கொண்டாடப்பட்டது. இதனால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. ஜம்முவில் கட்டுப்பாடுகள் முற்றிலும் தளர்த்தப்பட்டுள்ளன. சில இடங்களில் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதனிடையே, சுதந்திர தினத்தன்று, ஸ்ரீநகரில், தேசிய கொடியை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்றி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X