மக்களை சந்திக்க சுதந்திரம் வேணும்:ராகுல்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (98+ 51)
Advertisement
Congress,Governor,Kashmir,Rahul, RahulGandhi, ஆளுநர், கவர்னர், காங்கிரஸ், காஷ்மீர், ராகுல்,ராகுல் காந்தி, J&K, guv, challenge, Valley,  freedom, Kashmiris, forces

புதுடில்லி: காஷ்மீருக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்த அம்மாநில கவர்னர் சத்யபால் மாலிக்கிற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் எம்.பி., ராகுல், மக்களை சுதந்திரமாக சந்திக்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.


காங்., எதிர்ப்பு


காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய மத்திய அரசு, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக பிரித்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. மாநிலத்தில் வன்முறை நடப்பதாக தகவல் வந்துள்ளதாகவும், இது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் ராகுல் கூறியிருந்தார்.


அழைப்பு


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஷ்மீர் கவர்னர் சத்யபால் மாலிக் கூறியதாவது: காஷ்மீர் வர வேண்டும் என ராகுலுக்கு அழைப்பு விடுக்கிறேன். மாநிலத்தில் சூழ்நிலையை ஆராய்ந்து பின்னர் கருத்து தெரிவிக்க வேண்டும். பொறுப்பான நபரான நீங்கள், அவ்வாறு பேசக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.






அனுமதி வேண்டும்


இதற்கு பதிலளித்து ராகுல் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது:
மரியாதைக்குரிய கவர்னர் மாலிக்,
எதிர்க்கட்சி தலைவர் மற்றும் நான் அடங்கிய குழுவினர், காஷ்மீர் மற்றும் லடாக்கை பார்க்க வர வேண்டும் என்ற உங்களின் கோரிக்கையை ஏற்கிறோம். எங்களுக்கு விமானம் தேவையில்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.





Advertisement




வாசகர் கருத்து (98+ 51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
13-ஆக-201922:13:05 IST Report Abuse
bal பாக்கிஸ்தான் போகலாமே...
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
13-ஆக-201922:11:48 IST Report Abuse
bal ஏன் அங்கே போய் மோடி திருடன் என்று சொல்லவா....இத்தனை பொய் சொல்லி தேர்தலில் அடிவாங்கி இன்னுமா திருந்தலை....உங்கள் மற்றும் உங்கள் கூட்டு களவாணியான அப்துல்லா குடும்பத்தால்தான் இந்த மாநிலம் இந்த பரிதாப நிலைக்கு வந்தது...இன்னுமா போகணும்.
Rate this:
Share this comment
Cancel
R Venkatesan - Bengaluru,இந்தியா
13-ஆக-201921:01:09 IST Report Abuse
R Venkatesan மச்சான் நம்ம ஜனங்க மூடு இல்லாதா போதே உன்னை இப்படி கழுவி கழுவி ஊத்தறாங்களே இதுவே மூடு இருந்தா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X