காஷ்மீர் விவகாரம்: மத்திய அரசுக்கு அவகாசம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில், சுமூகமான சூழ்நிலை திரும்ப மத்திய அரசுக்கு உரிய அவகாசம் தேவை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட், அது குறித்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.கேள்வி காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மொபைல் போன், இன்டர்நெட் சேவை, உள்ளிட்டவற்றை திரும்ப வழங்க வேண்டும் என தெசீன் பூனவாலா
காஷ்மீர், சுப்ரீம் கோர்ட், அட்டர்னி ஜெனரல்,

புதுடில்லி: காஷ்மீர் விவகாரத்தில், சுமூகமான சூழ்நிலை திரும்ப மத்திய அரசுக்கு உரிய அவகாசம் தேவை எனக்கூறிய சுப்ரீம் கோர்ட், அது குறித்த வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


கேள்வி


காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள், மொபைல் போன், இன்டர்நெட் சேவை, உள்ளிட்டவற்றை திரும்ப வழங்க வேண்டும் என தெசீன் பூனவாலா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த சுப்ரீம் கோர்ட், இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என கேள்வி எழுப்பியது.


பதில்


இதற்கு அட்டர்னி ஜெனரல் அளித்த பதில்: மாநிலத்தில் சூழ்நிலையை தினசரி ஆய்வு செய்து வருகிறோம் இது மிகவும் முக்கியமான விஷயம். அனைவரின் நலனுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஒரு துளி ரத்தம் சிந்தக்கூடாது. ஒருவர் கூட பலியாகக்கூடாது என்ற காரணத்திற்காக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.


latest tamil news

ஒத்திவைப்பு


இதனை தொடர்ந்து கோர்ட், காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை பதற்றமாக உள்ளது. மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆனால், ஒரு நாள் இரவில் எதுவும் நடந்தவிடாது. அங்கு என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அரசு மட்டுமே பதிலளிக்க முடியும். மாநிலத்தில் அமைதி நிலவும் வரை பொறுத்திருப்போம் எனக்கூறி, வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்தது.


மறுப்பு


'காஷ்மீர் டைம்ஸ்' பத்திரிகையின் செயல் ஆசிரியர் அனுராதா பாசின் என்பவர், காஷ்மீரில் பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கெடுபிடிகளை ரத்து செய்யக் கோரி தொடர்ந்த அவசர வழக்கு, விசாரணைக்கு வந்த போது, அதனை அவசரமாக விசாரிக்க மறுத்துவிட்டது.

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
14-ஆக-201906:28:15 IST Report Abuse
venkatan அரசியல்-மதம்-தீவிரவாதம்-ஊழல்...இந்த நான்கு கூட்டணிதான் காஷ்மீரை படாத பாடு படுத்துகிறது.அதற்கு பாக்கி குளிர்காய்கிறது..இந்த நான்கு கூட்டணி சங்கிலியை உடைக்க வேண்டும். அப்பொழுதுதான் காஷ்மீர் என்ற இந்தியாவின் தலைவலி தீரும்.
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
13-ஆக-201922:05:55 IST Report Abuse
Allah Daniel சரியான முடிவு..உமர், மெகபூபா ஜெயிலில் இருந்ததாலதான், மக்கள் ஆடுவெட்டி கொண்டாடுறாங்க..இந்த விஷ கிருமிகளை வெளியே விட்டால், அமைதி கேட்டுடும்..
Rate this:
Cancel
13-ஆக-201919:58:49 IST Report Abuse
ஆப்பு அதான் காஷ்மீர்ல அமைதி நிலவுது. மக்கள் மகிழ்ச்சியுடன் ஆடு வெட்டி கொண்டாடுறாங்கன்னு ஆளாளுக்கு சொல்றாங்களே....இன்னும் என்ன தயக்கம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X