பொது செய்தி

இந்தியா

கார் மீது கடிதம்: நிர்மலா துரிதம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (67)
Advertisement
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,

பெங்களூரு: கர்நாடகாவில், வெள்ளம் காரணமாக, இடிந்த வீட்டை சரி செய்து தரும்படி, பெண் ஒருவர் , மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கார் மீது கோரிக்கை மனுuவ வீசினார். இதனை பார்த்த அமைச்சர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

கர்நாடக மாநிலங்களில் பல நாட்களாக மழை பெய்து வருகிறது. பெலகாவி, பாகல்கோட்டை, யாதகிரி, கார்வார், மங்களூரு, குடகு, ஹாசன், மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பெலகாவி மாவட்டத்தில், வெள்ளம் சூழ்ந்த இடங்களை சேர்ந்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.






இந்நிலையில், பெலகாவி மாவட்டத்தில், வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டார். அப்போது, பெண் ஒருவர், வெள்ளத்தில் இடிந்த தனது வீட்டை மறுசீரமைப்பது குறித்து, மனுவாக எழுதி, அமைச்சர் சென்ற கார் மீது வீசினார். இதனை பார்த்த நிர்மலா , உடனடியாக காரை நிறுத்தி கோரிக்கை மனுவை பார்த்தார்.
தொடர்ந்து, காரில் இருந்து இறங்கிய அவர், அந்த பெண்ணிடம் சென்று, பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீடு கட்டி தரப்படும். இதற்காக அழ வேண்டாம் என உறுதி அளித்ததுடன், இது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஆக-201916:19:42 IST Report Abuse
Endrum Indian அய்யயோ இவர் செய்வதை பார்த்தால் இவர் ஒரு அரசியல்வாதிக்கு லாயக்கிலே போல தெரிகின்றது, உங்கள் மனித நேயத்திற்கு தலைவணங்குகின்றோம். முஸ்லீம் நேரு காங்கிரஸ் முதல் கம்யூனிஸ்ட் கட்சி வரை உள்ள அரசியல்வாதிகளுக்கு என்ன செய்வது என்றே புரிஞ்சிருக்காதே இப்போ??
Rate this:
Share this comment
Cancel
14-ஆக-201909:34:10 IST Report Abuse
ருத்ரா ஒரு அமைச்சரை சினேகிதியாக, சகோதரியாக பார்க்கும் மனோபாவம் நம் மண்ணிற்கே சொந்தம். பாரட்டுக்கள் madam.
Rate this:
Share this comment
Cancel
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
13-ஆக-201921:09:08 IST Report Abuse
Krishnamurthy Venkatesan அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், மந்திரிகளையும் மக்கள் எளிதில் சந்திக்க அரசியல் சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். மந்திரிகளை நெருங்க விடாமல் செய்பவர்கள் இந்த அதிகாரிகள் தான். இதனால் இந்த அதிகாரிகள் என்ன சாதித்து விட்டார்கள் என்று பெருமை கொள்ள முடியும்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X