பொது செய்தி

தமிழ்நாடு

நெல்லை தம்பதிக்கு அமிதாப், ஹர்பஜன் பாராட்டு

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (14)
Share
Advertisement
Harbhajan Turbanator, harbhajan_singh, Amitabh Bachchan, SrBachchan, நெல்லை  தம்பதி, அமிதாப் பச்சன், ஹர்பஜன் சிங், பாராட்டு, டுவிட்டர்,

சென்னை: கொள்ளையர்களை அடித்து விரட்டிய வயதான நெல்லை தம்பதிக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் கடையம், கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் சண்முகவேல்(78), அவர், 4 ஏக்கரில் எலுமிச்சை தோட்டம் அமைத்து, வீடு கட்டி, மனைவி செந்தாமரையுடன் (70)வசித்து வந்தார். நேற்று முன்தினம்(ஆக.,11) இரவு 9 மணிக்கு வீட்டு முற்றத்தில், சண்முகவேல் அமர்ந்திருந்த போது, கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து தாக்கினர்.
இதனையடுத்து இருவரும் பிளாஸ்டிக் சேர் உள்பட சிக்கிய பொருட்களை எடுத்து வீசி தாக்கினர். இதனால், சிக்கி கொள்வோம் என பயந்த கொள்ளையர்கள், செந்தாமரையின் கைகளை அரிவாளால் தாக்கி 4 சவரன் நகையுடன் தப்பினர். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ பதிவுகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதனை பார்த்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஆகியோர், அந்த முதியவர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமிதாப் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், அந்த வீடியோ காட்சிகளை மேற்கோள் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.


latest tamil news




கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்ட டுவிட்டர் பதிவு



latest tamil news




இதனிடையே, சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை எஸ்.பி., அருண்குமார், முதிய தம்பதியை பாராட்டியதுடன், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muraleedharan.M - Chennai,இந்தியா
14-ஆக-201907:36:28 IST Report Abuse
Muraleedharan.M இந்த திருட்டில் பங்கு திமுக மட்டுமில்லை, . அதிமுகவும் உடந்தை. வெளியில் பாத்தால் எதிரி . உள்ளுக்குள் கூட்டு .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
14-ஆக-201907:30:10 IST Report Abuse
sankar அந்த பெரியவர் இன்று இருந்தால் என்ன சொல்வார் தெரியுமா - "வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்கள் - இப்படி செய்வது அவர்களின் குற்றமல்ல" என்று - நல்லவேளை
Rate this:
Cancel
Sanjay - Chennai,இந்தியா
13-ஆக-201921:25:06 IST Report Abuse
Sanjay சந்தேகமேயில்லை, திருட வந்தவர்கள் திமுக குண்டர்கள் தான்
Rate this:
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஆக-201906:45:10 IST Report Abuse
Pannadai Pandianபிரியாணி தயார் செய்து வைக்காதது தம்பதியர் குற்றம்…..பேசாம தின்னுட்டு போயிருப்பானுங்க…....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X