மோடி ஹூஸ்டன் நிகழ்ச்சி; 40 ஆயிரம் பேர் பதிவு

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (14)
Advertisement

ஹூஸ்டன்: அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில், செப். 22ல், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே, பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு, இதுவரை, 40 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.


ஐ.நா., சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்கிறார். அந்தப் பயணத்தின்போது, செப். 22ல், ஹூஸ்டன் நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் இடையே உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாட்டை, டெக்சாஸைச் சேர்ந்த இந்தியர்கள் அமைப்பு செய்து வருகிறது.

'ஹவ்டி மோடி' என்ற பெயரில், ஹூஸ்டனில் உள்ள பிரமாண்ட கால்பந்து மைதானத்தில் நடக்க உள்ள இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்போர், தங்களுடைய பெயர்களை பதிவு செய்து, 'பாஸ்' பெற வேண்டும். இதுவரை, 40 ஆயிரம் பேர் தங்களுடைய பெயரை முன்பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர் என, நிகழ்ச்சி ஏற்பட்டாளர்கள் எதிர்பர்க்கின்றனர்.

இந்தியர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் ஒன்றான, ஹூஸ்டனில் மட்டும், ஐந்து லட்சம் இந்தியர்கள் உள்ளனர். இதற்கு முன், 2014ல் நியூயார்க் மேடிசன் சதுக்கத்திலும், 2016ல் சிலிக்கான் வேலியிலும், அமெரிக்க வாழ் இந்தியர்களுடனான பிரதமர் நரேந்திர மோடியின் சந்திப்புகள் நடந்துள்ளன.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathiya narayanan - Dallas,யூ.எஸ்.ஏ
14-ஆக-201909:27:00 IST Report Abuse
sathiya narayanan எனக்கு ஈமெயில் மூலம் பதிவு செய்யும் படி ஒரு கோவிலில் இருந்து அழைப்பு அனுப்பப்பட்டது. அந்த கோவிலுக்கு நன்கொடை அளித்தது என்னுடைய தவறு என்று என்னை நானே நொந்துகொண்டு பதிவு செய்யாமல் ஈமெயில்லாய் அஸித்தேன் கடவுள் மீது கோபத்துடன்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஆக-201903:49:38 IST Report Abuse
J.V. Iyer தமிழ் நாடு தவிர மோடிஜிக்கு உலகெங்கும் புகழ் கொடிகட்டி பறக்கிறது. கிணற்று தவளைக்கு தாமரை என்றால் தெரியுமா, ரோஜா என்றால் புரியுமா?
Rate this:
Share this comment
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
17-ஆக-201914:00:09 IST Report Abuse
skv srinivasankrishnaveniதமிழர்களில் திமுக அண்ட் அதிமுக அனுதாபிகளுக்கும் இந்தகட்ச்சிகளின் அடிவருடிகளும் தவிர உண்மையான தேசம் நன்னாயிருக்கணும் என்று நம்பவா எல்லோரும் பிஜேபி அண்ட் மோடி அமீத்ஷாவை நம்புகிறோம் நம்ம நாடு நன்னாயிருக்கு இப்போது தமிழ்நாடுதான் கேவலமா மது என்ற டாஸ்மாக் அரக்கனிடம் சிக்குண்டு நாசமா போயிண்டுருக்கு எவ்ளோ கேவலம்கள் இருக்கோ அனைத்தும் அரங்கேறுது டாப் டு டௌன் இந்தமாதிரி அவலம்கள் நாடுமுழுக்க இருந்தாலும் தமிழ்நாடு தான் முதல் இடம்...
Rate this:
Share this comment
Cancel
vinegan - salem,இந்தியா
13-ஆக-201923:01:44 IST Report Abuse
vinegan மக்கள் பணத்தில் சுயவிளம்பரமே வாழ்க்கை
Rate this:
Share this comment
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
14-ஆக-201908:43:56 IST Report Abuse
Natarajan Attiannaசிங் உலகம் சுற்றியது காங்கிரஸ் காரனுக பணமா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X