கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோட்டையில் 5 அடுக்கு பாதுகாப்பு

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Share
5 அடுக்கு, பாதுகாப்பு ,கோட்டை, சுதந்திர தினம், சிசிடிவி கேமரா

சென்னை : சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பாணியில் ஈடுப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் 72வது சுதந்திரதினத்தை முன்னிட்டு கோட்டையில் முதல்வர் பழனிசாமி கொடியேற்றி வைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை துவக்கி வைக்கிறார். இதனால் கோட்டை பகுதி முழுவதும் 5 அடுக்கு பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டு சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. பொதுமக்கள் கூடும் இடங்களில் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்களில் சந்தேக நபர்கள் தங்கியிருக்கிறார்களா என தீவிர சோதனை செய்யப்படுவதாகவும், ரோந்து பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடக்கு மண்டல கூடுதல் கமிஷனர் தினகரன் தலைமையில் இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள் என அதிகாரிகள் உட்பட 12 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X