பத்திரிகைகளுக்கு சவுதியில் நெருக்கடி

Added : மே 01, 2011 | கருத்துகள் (2) | |
Advertisement
ரியாத் : சவுதி அரேபிய அரசு, பத்திரிகைகள் மற்றும் செய்தி வெளியீடுகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால், 60 லட்ச ரூபாய் அபராதம் முதல், பத்திரிகையை இழுத்து மூடுதல் வரை, பல்வேறு தண்டனைகள் கிடைக்கும் என எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, அரபுத்

ரியாத் : சவுதி அரேபிய அரசு, பத்திரிகைகள் மற்றும் செய்தி வெளியீடுகள் மீதான கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியுள்ளது. நாட்டின் பாதுகாப்புக்கு எதிரான செய்திகளை வெளியிட்டால், 60 லட்ச ரூபாய் அபராதம் முதல், பத்திரிகையை இழுத்து மூடுதல் வரை, பல்வேறு தண்டனைகள் கிடைக்கும் என எச்சரித்துள்ளது. மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் ஏற்பட்டுள்ள மக்கள் எழுச்சி, அரபுத் தீபகற்பத்திலும் பரவி வருகிறது. அத்தீபகற்பத்தின் தென்பகுதியில் உள்ள ஏமன், பெரும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது.

சவுதியின் உதவியோடு, மக்கள் எழுச்சியை ஒருவாறு அடக்கி விட்டது பக்ரைன். அதேபோல், பல்வேறு சலுகைகளை அளித்ததன் மூலம், ஓமனும் மக்களை அடக்கி விட்டது. இந்த எழுச்சியின் பாதிப்பு, சவுதியிலும் எதிரொலிக்குமோ என, அந்நாட்டு அரசு பெரும் கவலையில் உள்ளது. அதனால் சமீபத்தில், நாட்டு மக்களுக்குப் பல்வேறு சலுகைகளை அறிவித்தார் மன்னர் அப்துல்லா. எனினும், சிறுபான்மையினரான ஷியா பிரிவினர் தொடர்ந்து அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 29ம் தேதி அரசு வெளியிட்ட அறிக்கையில், "நாட்டின் ஒற்றுமை, பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டால், உயர்பொறுப்பில் உள்ள மத குருக்களின் பத்வாக்களை விமர்சனம் செய்தால் அல்லது அவற்றிற்கு எதிராக நடந்தால், 59 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் கட்ட வேண்டி வரும் அல்லது பத்திரிகையை இழுத்து மூட வேண்டி வரும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
02-மே-201107:09:42 IST Report Abuse
ஆரூர் ரங உலகெங்கும் ஜனநாயக இயக்கங்களை ஆதரித்து, மக்கள் சக்தி பரவ உதவிய அமெரிக்காவும்,இந்தியாவும் அரபு நாடுகள் விஷயத்தில் மட்டும் வாய் மூடி மவுனியாய் இருப்பதேன்? (பெட்ரோல்) இருப்பவனுக்கு ஒரு நியாயம். இல்லாதவனுக்கு ஒரு நியாயமா? அல்லது மதம் குறுக்கே நிற்கிறதா?
Rate this:
Cancel
KRISHNAMOORTHY Somangili Perumal - MADURAI,இந்தியா
02-மே-201100:33:01 IST Report Abuse
KRISHNAMOORTHY Somangili Perumal அனைத்து அரபு நாடுகளிலும் மக்கள் புரட்சி தோற்று வியாதி போல பரவ காரணம் என்னவென்றால் ,அரபு நாடுககளை ஆளும் அதிகாரவர்க்கம் ,மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கி உள்ளனர் .ஆனால் மக்களை ஷரியத் சட்டப்படி வாழ வேண்டும் .இல்லையெனில் கடுமையான தண்டனை தரப்படுகிறது .பொதுவாக ஆளும் வர்க்கத்தினர் அமெரிக்காவின் அடிமைகள் .ஆனால் ,மக்களோ அமெரிக்காவின் எதிரிகள் .இது தான் அரபு நாடுகளில் நடக்கும் ஆளும் அரசுகளுக்கு எதிரான புரட்சிக்கு அடிப்படை காரணம்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X