பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஆக 13, 2019
Advertisement
 இதே நாளில் அன்று


ஆகஸ்ட் 14,1905

என்.எம்.ஆர்.சுப்பராமன்: மதுரையில், ராயலு அய்யர்- - -காவேரி அம்மாள் தம்பதிக்கு, 1905 ஆக., 14ல் பிறந்தார். இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று, கடுங்காவல் சிறை பெற்றவர். சர்வோதயா சங்க தலைவர் வினோபா பாவேயின், பூமி தான இயக்கத்திற்கு, தன், 100 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கியவர். மதுரை மாவட்ட, காங்., தலைவராக, 1930ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1934ல், நாடு முழுவதும், தீண்டாமைக்கு எதிராக, காந்தி பிரசாரம் செய்தார். அவர், மதுரை வந்த போது, சுப்பராமன் வீட்டில், இரண்டு நாள் தங்கினார்.

மதுரை நகராட்சி தலைவராக, 1935 -- -42 வரை இருந்துள்ளார். 1937 மற்றும், 1946ல், சென்னை மாகாண சட்டசபை உறுப்பினராகவும், லோக்சபா, எம்.பி.,யாக, 1962 -- 67 வரையிலும் இருந்தார். 1983 ஜன., 25ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X