குற்றாலம் அருவியில் மதுரை வாலிபர் பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குற்றாலம் அருவியில் மதுரை வாலிபர் பலி

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019
Share

திருநெல்வேலி: மதுரை, ஆரப்பாளையத்தைச் சேர்ந்த, பழக்கடை ஊழியர், சூரியநாராயணன், 20, தன் நண்பர்களுடன், ஆக. 10ல், குற்றாலத்திற்கு, சுற்றுலா வந்தார்.பலத்த மழையால், குற்றால அருவிகளில், நீர்வரத்து அதிகம் உள்ளது. குற்றாலம் மெயின் அருவியில் குளித்த சூரியநாராயணன், தவறி, தடாகத்தில் விழுந்து பலியானார். பாறை இடுக்கில், சிக்கிக்கொண்டதால் உடல் வெளியே வரவில்லை. நேற்று காலையில், அவரது உடல், தடாகத்தில் மிதந்து வந்தது. உடலை மீட்ட போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X