பொது செய்தி

தமிழ்நாடு

'நீமோகாக்கல்' தடுப்பூசி திட்டம் துவக்கம்

Added : ஆக 13, 2019
Share
Advertisement

கோவை : நாட்டிலேயே முதல் முறையாக, 1,500 கிராமிற்கு கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 'நீமோகாக்கல்' தடுப்பூசி, இலவசமாக வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனையில், எடை குறைவாக பிறந்த, பச்சிளம் குழந்தைகளுக்கு, 'நீமோகாக்கல்' தடுப்பூசி வழங்குவது உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளில், சுகாதார துறை அமைச்சர், விஜயபாஸ்கர் பங்கேற்றார்.பத்திரிக்கையாளர்களிடம், அவர் கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக, 1,500 கிராமிற்கு கீழ், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு, 'நீமோகாக்கல்' தடுப்பூசி, இலவசமாக வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. ஒரு, 'டோஸ்' மருந்து, 4,000 ரூபாய் வீதம், நான்கு டோஸ்களுக்கு, 16 ஆயிரம் ரூபாய் செலவு பிடிக்கும். இது, இலவசமாக வழங்கப்படுகிறது.

தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கவும், 'நெக்ஸ்ட்' தேர்வுக்கும், தமிழக அரசு சார்பில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.மத்திய அரசிடம், தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலனுக்காக, இலவசமாக இயக்கப்படும், அமரர் ஊர்தி சேவையை, தனியாருக்கு மாற்றும் எண்ணம் இல்லை. இவ்வாறு, அவர் கூறினார். உலக உறுப்பு தானம் தினத்தை முன்னிட்டு, கோவை அரசு மருத்துவமனையில், நர்சிங் மாணவியர் பங்கேற்ற, விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம், 'நானும் ஒரு கொடையாளி' என்ற, 'செல்பி' எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்ச்சியில், உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, தமிழ்நாடு உடல் உறுப்பு தான உறுப்பினர் செயலர், காந்திமதி, கலெக்டர், ராஜாமணி, மருத்துவமனை டீன், அசோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.நர்சிங் பள்ளி முதல்வருக்குபதில் தெரியலசுகாதார துறை மூலம், அரசு மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள், 'அம்மா பேபி கேர் கிட்'டில் எத்தனை பொருட்கள் உள்ளன என்பது குறித்து, நர்சிங் பயிற்சி பள்ளி மாணவியரிடம், அமைச்சர், விஜயபாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

மாணவியர், பதில் அளிக்கவில்லை.இதையடுத்து, நர்சிங் பள்ளியின் பொறுப்பு முதல்வர், தனலட்சுமியிடம், திட்டம் குறித்து கேள்வி எழுப்பினார். அவரும் பதில் அளிக்காததால், அவர் மீது, '17ஏ' பிரிவின் கீழ், ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X