சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது

Added : ஆக 13, 2019
Share
Advertisement

ராமேஸ்வரம் : நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்தனர்.

ஆக.,12 ல் ராமேஸ்வரத்தில் இருந்து 517 விசைப்படகில் கடலில்மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் இந்திய, இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது, அங்கு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் மீனவர்களை விரட்டினர். பீதியடைந்த மீனவர்கள் கடலில் வீசிய வலையை படகில் இழுத்து வைத்து கரை திரும்பிய போது, அன்றிரவு 12:30 மணிக்கு கிஸ்சிங்கர் என்பவரது படகை இலங்கை வீரர்கள் பிடித்து, படகில் இருந்த மீனவர்கள் கிஸ்சிங்கர், மரியகிதியோன், சிம்சன், மரியமில்லர், இன்னாசி, ஜார்ஜ், மெல்சன் ஆகிய 7 பேரையும் கைது செய்து காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.பின் நேற்று மீனவர்கள்மீது எல்லை தாண்டி, தடை செய்த வலையில் மீன்பிடித்ததாக யாழ்பாணம் மீன்துறையினர் வழக்கு பதிந்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X