பொது செய்தி

தமிழ்நாடு

ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சுண்ணாம்பு கொளத்துார் ஏரி

Added : ஆக 13, 2019
Share
Advertisement

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவிலம்பாக்கம் சுண்ணாம்பு கொளத்துார் ஏரி, ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கித் தவிக்கிறது.

வடகிழக்கு பருவ மழை துவங்கும் முன், ஏரிகளை துார் வாரி, மழைநீரை சேகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம், கோவிலம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது, சுண்ணாம்பு கொளத்துார் ஏரி. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில், 80 ஏக்கர் பரப்பில் உள்ள இந்த ஏரி, கோவிலம்பாக்கம், வடக்குப்பட்டு, சுண்ணாம்பு கொளத்துார், நாராயணபுரம், பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளில் நடந்த, விவசாயத்தின் நீர் ஆதாரமாக விளங்கியது.

விவசாயிகளும், ஊர் பொதுமக்களும் இணைந்து, 12 ஆண்டிற்கு ஒரு முறை ஏரியை துார் வாரி, கரையை பலத்தப்படுத்தி பாதுகாத்து வந்தனர். பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டிற்கு வந்த பின், இந்த ஏரி கண்டு கொள்ளப்படவில்லை; குறைந்த பட்சமாக பராமரிப்பு பணி கூட செய்யப்படவில்லை.தென்சென்னை விரிவாக்கத்தின் போது, ஆக்கிரமிப்பாளர்கள், ஏரியை கபளீகரம் செய்யத் துவங்கினர். படிப்படியாக, 20 ஆண்டுகளில், ஏரியின், 20 ஏக்கர் நிலம், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியுள்ளது.

ஆக்கிரமிப்பு தொடர்வது குறித்து, பொதுப்பணித்துறையினர் கொஞ்சமும் கவலைப்பட வில்லை. வழக்கம்போல, எந்த ஆவணங்களும் இல்லாமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மின் இணைப்பு, தெருவிளக்கு, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, சம்பந்தப்பட்ட துறையினர் செய்து கொடுத்துள்ளனர்.மிச்சம் மீதமுள்ள ஏரி பகுதிகளை, ஆக்கிரமிப்பாளர்கள், கழிவறையாக பயன்படுத்தி வருவகின்றனர்.

ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரிக்குள் விடப்படுவதோடு, குப்பையும் கொட்டப்பட்டு வருகிறது. ஏரிக்கரையின் ஒரத்தில் உள்ள, 10க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் இருந்து, தினமும் பல லட்சம் லிட்டர் நிலத்தடி நீர் உறிஞ்சி, திருட்டுத் தனமாக விற்கப்பட்டு வருவதால், ஏரி பகுதியில் நிலத்தடிநீர் மட்டமும் வெகுவாக சரிந்து விட்டது. எனவே, ஏரியை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து, முழுமையாக மீட்க வேண்டும். ஏரியை ஆழப்படுத்தி, மழைநீர் சேகரிக்க வழி செய்ய வேண்டும் என, சமூக நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து, கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு முறைப்படி, 'நோட்டீஸ்' வழங்கி, ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்படும். ஏரியை ஆழப்படுத்தி, கரையை பலப்படுத்தும் பணிகளும், விரைவில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு, அவர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X