அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேரளாவுக்கு தி.மு.க., நிவாரண பொருட்கள்

Added : ஆக 13, 2019
Share
Advertisement

சென்னை : மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு, சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள், தி.மு.க., தலைவர், ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, நிருபர்களிடம் ஸ்டாலின் கூறியதாவது:கேரளா மாநிலம், கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின், பல்வேறு பகுதி களில், இருக்கக்கூடிய மக்கள், கடும் துன்பத்திற்கும், துயரத்திற்கும் ஆளாகியுள்ளனர். தி.மு.க., சார்பில், கேரள மக்களுக்கு உதவ வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துஇருந்தேன்.அதை ஏற்று, முதல் கட்டமாக, சென்னை மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் தரப்பட்டு உள்ளன.

தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், இதுபோன்ற நிவாரண பொருட்கள் வரவுள்ளன. எனவே, நிவாரணப் பொருட்கள் அனைத்தையும், ரயில் வாயிலாக அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகளை, தி.மு.க., செய்து வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X