சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்

Added : ஆக 13, 2019
Advertisement

தமிழகத்தில், தங்கம் விற்பனையில், முதல் முறையாக, 22 காரட் ஆபரண தங்கம், சவரன் விலை, 29 ஆயிரம் ரூபாயை தாண்டி, புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால், அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால், டாலரில் அதிகளவில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள், தங்களின் முதலீட்டை திரும்ப பெற்று, தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.இதையடுத்து, சர்வதேச சந்தையில், ஜூலை இறுதியில் இருந்து, தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இதன் விளைவாக, இந்தியாவிலும், தங்கம் விலை, எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில், இம்மாதம், 1ம் தேதி, கிராம் தங்கம், 3,310 ரூபாய்க்கும், சவரன், 26 ஆயிரத்து, 480 ரூபாய்க்கும் விற்றது. அதற்கு அடுத்த நாளே, கிராம், 3,383 ரூபாயாகவும், சவரன், 27 ஆயிரத்து, 64 ரூபாயாகவும் அதிகரித்து, புதிய சாதனை படைத்தது. பின், ஐந்து நாட்களில், அதாவது, 7ம் தேதி, கிராம் தங்கம், 3,547 ரூபாய்; சவரன், 28 ஆயிரத்து, 376 ரூபாய் என்ற, புதிய உச்சத்தை எட்டியது.இதனால், விரைவில் சவரன் விலை, 30 ஆயிரம் ரூபாயை தாண்டும் என, வியாபாரிகள் தரப்பில் கூறப் பட்டது. நேற்று முன்தினம், கிராம் தங்கம், 3,603 ரூபாய்க்கும், சவரன், 28 ஆயிரத்து, 824 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராம் வெள்ளி, 49 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், நேற்று தங்கம் கிராமுக்கு, 24 ரூபாய் அதிகரித்து, 3,627 ரூபாய்க்கு விற்பனையானது. சவரன், 192 ரூபாய் அதிகரித்து, 29 ஆயிரத்து, 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக, சவரன் விலை, 29 ஆயிரம் ரூபாயை தாண்டி, வரலாற்று சாதனை படைத்துள்ளது.இம்மாத துவக்கத்தில், 27 ஆயிரம் ரூபாய் என்ற, சாதனை படைத்த சவரன் தங்கம், இரு வாரங்களுக்குள், 29 ஆயிரம் ரூபாயை தாண்டி, விலை உயர்வு சாதனையை தொடர்கிறது. அதாவது, இரு வாரத்தில் மட்டும், தங்கத்தின் விலை, சவரனுக்கு, 2,536 ரூபாய் உயர்ந்து உள்ளது.

எனவே, இம்மாத இறுதிக்குள், தங்கம் விலை, 30 ஆயிரம் ரூபாயை தாண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர், ஜெயந்திலால் சலானி கூறியதாவது:சீனா மற்றும் இ.சி.பி., எனப்படும், ஐரோப்பிய மத்திய வங்கியும், தற்போது, அதிகளவில், தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றன. அவை, தங்களிடம் உள்ள, அமெரிக்க டாலரையும், தங்கமாக மாற்றி வருகின்றன. இதனால், சர்வதேச சந்தையில், தங்கம் விலை உயர்ந்துள்ளதால், நம் நாட்டிலும், விலை உயர்ந்து வருகிறது. இது, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X