அரசியல் செய்தி

தமிழ்நாடு

தியாகிகள் உதவித்தொகை உயர்த்த கோரிக்கை

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : 'சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, மத்திய அரசு வழங்கி வரும் உதவித்தொகையுடன், மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை, உயர்த்தி வழங்க வேண்டும்' என, சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் அமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

அமைப்பின் தலைவர், விஜயராகவன், முதல்வரின் செயலரிடம் கொடுத்துள்ள மனு:சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, மத்திய அரசு வழங்கி வரும், உதவித்தொகையுடன், மாநில அரசு வழங்கும் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசின் மருத்துவ படியான, 500 ரூபாயை, 1,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்.தியாகிகளின் பேரன், பேத்திகளுக்கு, கல்வி, வேலைவாய்ப்பில், முன்னுரிமை அளிக்க வேண்டும். தியாகிகள் மற்றும் அவர்களின் வாரிசுகளுக்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கி, அதில், தமிழக அரசின் பசுமை வீடு கட்டித்தர வேண்டும்.

அப்பகுதிக்கு, தியாகிகள் குடியிருப்பு என, பெயரிட வேண்டும். தியாகிகளுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் ஒருவர் செல்ல, இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் வழங்கும் வீட்டுமனை, காலிமனை ஒதுக்கீட்டில், தியாகிகளுக்கு தனியாக, 5 சதவீதம் தர வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-ஆக-201914:08:05 IST Report Abuse
Bhaskaran உங்கள் முன்னோர்கள் செய்த தியாகங்களுக்கு நீங்கள் உரிமை கொண்டாடவேண்டாம் தியாகிகள் உயிருடன் இருக்கும்வரை அணைத்து சலுகைகள் மற்றும் உதவிகளை செய்யவேண்டும் வாரிசுக்குகளுக்கு அப்புறம் கொள்ளுபேரன்களுக்கு என்று தொடர்ந்துகொண்டேபோகும் இது அத்தியாகிகளுக்கே அவமானமாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X