அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகர் சித்தார்த் மீது போலீசில் பா.ஜ., புகார்

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : 'காஷ்மீர் விவகாரத்தில், தேசத்தின் ஒற்றுமையை குலைக்கும் வகையில் விமர்சனம் செய்த, நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும்' என, தமிழக பா.ஜ., செய்தி தொடர்பாளர், நாராயணன் திருப்பதி, போலீசில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து, அவரது அறிக்கை:நடிகர் சித்தார்த், பா.ஜ.,வை பற்றியும், மத்திய அரசு பற்றியும், பிரதமர் மோடி பற்றியும், தன் டுவிட்டரில், தரம் தாழ்ந்து, விமர்சித்து வருகிறார். காஷ்மீர் விவகாரத்தில், அவர் செய்த டுவிட்டர் பதிவில், மத்திய அரசை, தரம் தாழ்ந்து விமர்சித்துள்ளார்; தேச விரோத கருத்துக்களையும் தெரிவித்துள்ளார்.இது, தேசத்திற்கு எதிராக, மக்களை துாண்டி விடும், அவரின் குரூர எண்ணத்தை உணர்த்துகிறது. இதுகுறித்து, நடிகர் சித்தார்த் மீது, போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளேன்.

போலீசார் அவரை கைது செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஏற்கனவே, பேராயர் எஸ்றா சற்குணத்தின் மீது கொடுத்த புகார் மீது, நடவடிக்கை எடுப்பதாக, போலீஸ் கமிஷனர் உறுதியளித்துள்ளார்.இவ்வாறு, நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.rajagopalan - chennai ,இந்தியா
14-ஆக-201918:24:19 IST Report Abuse
s.rajagopalan இவனெல்லாம் ஒரு ஆளா ? இவன் ட்விட்டரை சினிமா பைத்தியங்கள் படிக்கும். வேறு யாரும் சீந்த மாட்டார்கள். இந்த வழக்கு அவனுக்கு ஒரு விளம்பரம் இது தேவையா ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X