அரசியல் செய்தி

தமிழ்நாடு

சவுந்திர பாண்டியன் பிறந்த நாள்: ராமதாஸ் கோரிக்கை

Added : ஆக 13, 2019
Advertisement

சென்னை : 'சவுந்திர பாண்டியன் பிறந்த நாளை, அரசு விழாவாக கொண்டாட வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வலியுறுத்திஉள்ளார்.அவரது அறிக்கை:பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், தம் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர், சவுந்திர பாண்டியன். நாடு விடுதலை அடையும் முன், சமூக நீதி, சுயமரியாதை, விவசாயிகள் நலன், மகளிர் முன்னேற்றம் ஆகியவற்றுக்காக பாடுபட்ட சவுந்திரபாண்டியனின் சிறப்புக்களையும், பெருமைகளையும், இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள செய்வது அரசின் கடமை.ஒவ்வொரு ஆண்டும், செப்., 15ல், சவுந்திர பாண்டியன் பிறந்தநாளை, அரசு விழாவாகக் கொண்டாட வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X