பொது செய்தி

தமிழ்நாடு

ஜெ., வசித்த வீட்டை நினைவு இல்லமாக்குவது சரியே!

Added : ஆக 13, 2019
Advertisement

சென்னை : 'ஜெயலலிதா வாழ்ந்த, வேதா நிலையம் வீட்டை, அரசு நினைவு இல்லமாக மாற்றுவது, முற்றிலும் பொருத்தமான நடவடிக்கை' என, சென்னை மாவட்ட கலெக்டர், அரசிடம் அளித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:சென்னை, போயஸ் கார்டனில், ஜெயலலிதா வசித்த வேதா நிலையம் வீட்டை, நில எடுப்பு செய்வது, நியாயமான காரணங்கள் அடிப்படையிலும், பொது நலன் அடிப்படையிலும், எடுக்கப்பட்ட முடிவாகும்.நிகழ்வுகள்சமூக தாக்க மதிப்பீடு குறித்து, ஆய்வு செய்த முகமையும், நிபுணர் குழுவும், 'நில எடுப்பினால், பாதக நிகழ்வுகள் எதுவும் ஏற்படாது' என, தெரிவித்து உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு, 29.33 கோடி ரூபாய்; அதில் உள்ள கட்டடத்தின் மதிப்பு, 2.76 கோடி ரூபாய்.நில எடுப்பினால் பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. நில எடுப்புக்கு உள்ளாகும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறை, நீதிமன்றத்தில் உறுதி ஆவணம் தாக்கல் செய்துள்ளது. ஜெ., வாரிசுகளாக, தங்களை அறிவிக்க கோரி, தீபா, தீபக் ஆகியோர் தொடர்ந்த வழக்கு, நிலுவையில் உள்ளது. எனவே, நில எடுப்புக்கான இழப்பீட்டுத் தொகை, நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டு விடும்.நில எடுப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் பகுதி, வேதா நிலையம் மட்டும் என்பதால், போயஸ் கார்டனில் உள்ள, இதர பகுதிகளுக்கும், வீடுகளுக்கும், எந்த பாதிப்பும் ஏற்படாது. வேதா நிலையத்தை தவிர்த்து, நகரின் வேறு பகுதியில், நினைவு இல்லம் அமைப்பது, அரசின் கொள்கை முடிவுக்கு எதிராக அமையும்.

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ்., மற்றும் செம்மொழிப் பூங்கா வளாகங்களில், காலியாக உள்ள இடங்களை, வாகனங்கள் நிறுத்த பயன்படுத்திக் கொள்ளலாம். போயஸ் கார்டனில், 'ஆன்லைன்' வழியாக, பார்வையாளர்களை பதிவு செய்து அனுமதித்தால், போக்குவரத்து நெரிசலை சமாளிக்கலாம்.நடவடிக்கைஜெயலலிதா, நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு, முன்மாதிரியான தலைவராகவும், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில், ஒரு பெண், எந்த அளவுக்கு வெற்றிகரமாக செயல்பட முடியும் என்பதற்கும், எடுத்துக்காட்டாக திகழ்ந்தார்.

எனவே, அவர் வாழ்ந்து மறைந்த, வேதா நிலையத்தை, அரசு நினைவு இல்லமாக மாற்றுவது, முற்றிலும் பொருத்தமான நடவடிக்கையே.இவ்வாறு, அறிக்கையில் கலெக்டர் கூறியு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X