அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை வர்த்தக மையம் ரூ.255 கோடியில் விரிவாக்கம்

Added : ஆக 13, 2019
Advertisement

சென்னை : ''சென்னை வர்த்தக மையத்தில், 255 கோடி ரூபாய் செலவில், 9.13 ஏக்கர் பரப்பளவில், விரிவாக்க பணிகள் விரைவில் துவங்க உள்ளன,'' என, தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் தெரிவித்தார்.

சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள, சென்னை வர்த்தக மையத்தின், புதிய இணையதள பக்கம் துவக்கம் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை வெளியீட்டு விழா, இம்மையத்தில், நேற்று நடந்தது.விழாவில், அமைச்சர், எம்.சி.சம்பத் பேசியதாவது: சென்னை வர்த்தக மையத்தின், புதிய இணையதளப் பக்கம், இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, வர்த்தகர்கள், கண்காட்சி நடத்த, 'ஆன்லைன்' வழியாக அரங்குகளை பதிவு செய்யவும், பணம் செலுத்தவும் முடியும்.ஏற்கனவே, சென்னை வர்த்தக மையத்தில், 6,160 சதுர மீட்டர் பரப்பளவில், இரண்டு அரங்குகள் உள்ளன.

தற்போது, 255 கோடி ரூபாய் மதிப்பில், 9.13 ஏக்கர் பரப்பளவில், புதிய கண்காட்சி அரங்கங்கள், கூட்ட அரங்கு, பல அடுக்கு வாகன நிறுத்தம் போன்றவை கட்டப்பட உள்ளன.இந்த திட்டத்தை, 2021 மார்ச்சுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, முதல்வர், விரைவில் துவக்கி வைக்க உள்ளார்.மேலும், புதிய கட்டடத்தில், 1,000 கிலோ வாட் திறனில், சூரியசக்தி மின் உற்பத்தி மையம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை வர்த்தக மையத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் வகையில், புதிய சுற்றுச்சூழல் கொள்கையும் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார். தொழில் துறை முதன்மை செயலர், என்.முருகானந்தம், சென்னை வர்த்தக மைய நிர்வாக இயக்குனர், சுப்புலட்சுமி உட்பட, பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X