விமானம் தேவையில்லை!

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (5)
Share
Advertisement
 விமானம் தேவையில்லை!

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் சிலரை அழைத்து, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிக்கு செல்வேன். எங்களுக்கு, எந்தவிதமான விமான சேவையும் தேவை இல்லை. ஆனால், சுதந்திரமாக பயணித்து, மக்கள் மற்றும் ராணுவ வீரர்களை சந்திக்க, அனுமதிக்க வேண்டும்.
ராகுல் , வயநாடு எம்.பி., காங்.,


காங்கிரஸ் குழப்ப நிலை!


ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில், காங்கிரசின் கரண் சிங், ஜோதிராதித்யா சிந்தியா, தியோரா ஆகியோர், மத்திய அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். சிதம்பரம், மணிசங்கர் அய்யர் உள்ளிட்டோர், எதிர்க்கின்றனர். இது, காங்கிரசில் இருக்கும், குழப்ப நிலையைத் தான் காட்டுகிறது. அவர்கள் ஒருபோதும் நிலையான கொள்கையில் இருந்ததில்லை.
பிரகாஷ் ஜாவடேகர் , மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர், பா.ஜ.,


ஏழைகளுக்கு விரோதம்


பத்து மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும், எஸ்.சி., - - எஸ்.டி., மாணவர்களுக்கான, ஐந்து பாடங்களுக்கான தேர்வு கட்டணம், 24 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கட்டணம், இரு மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இது, ஏழைகளுக்கு விரோதமானது. இந்த கட்டண உயர்வை, திரும்ப பெற வேண்டும்.

மாயாவதி , தலைவர், பகுஜன் சமாஜ்

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201916:46:42 IST Report Abuse
Endrum Indian கவர்னர் சொன்னது ஹெலிகாப்டர்??? இங்கே பப்பு சொல்வது விமான சேவை??? ஆகமொத்தம் பப்பு தி கிரேட் ரூ 10 சாக்லேட் எனக்கு வேண்டும் இல்லையென்றால் கீழே விழுந்து புரளுவேன் என்று சொல்லும் ஒரு 6 வயது சிறுவனின் மனநிலையிலிருந்து என்று தான் மாறுமோ இந்த பப்பு??????
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
14-ஆக-201912:41:00 IST Report Abuse
Girija போற இடம் எங்கேப்பா? போனானனாப்புறம் சொல்ரறேன்ப்ப்பா. இப்ப இதை சமாளிக்க, எங்க ஊர் ஆளு ஒருத்தர் இருக்காரு, அவர் நடந்தே போய்டுவாரு, அவருதான் இந்த விஷயத்துக்கெல்லாம் லாயக்கு, அவரை கூப்பிட்டு தேநீர் விருந்து குடுங்க அப்போ டீயை வேணுமின்னே உங்க சட்டையில் கொட்டிக்குங்க, உடனே மனுஷன் பதறி போய் தானே துடைத்து விட்டு டிராமா செய்வார், அழுவார். அதுதான் சமயம் நடை பயணம் கன்னியாகுமாரி டு காஷ்மீர் போக டீலிங் பேசி முடிச்சிடுங்க. ஒரு ரெண்டு மூணுமாசம் பாராளுமன்றத்தில் உங்களை திட்டி தூத்துவதற்கு ஆளில்லாமல் பா ஜா தவிக்கும். அப்புறம் காஷ்மீரில் கள்ளிக்காடு என்று புத்தகம் போடுவார் உங்களையும் அதில் திட்டி எழுதுவார் அதற்கு திமுக வை விட்டு தேச துரோகம் கேஸ் போட்டால் போச்சு.
Rate this:
Cancel
Narasimha - Chennai,இந்தியா
14-ஆக-201911:27:55 IST Report Abuse
Narasimha OK. You do not want airplane. You also say I will go without the black and white cat commandos accompanying you every where, now that you are no in any organisational position in Congi. You also say I do not want camera men accompany me to border areas. They we will accept you are real and courageous PAPPU. You try and face the public alone at Ladakh.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X