ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்

Added : ஆக 13, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 ராஜ்யசபா எம்.பி., பதவிக்கு மன்மோகன் சிங் வேட்பு மனு தாக்கல்

ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் காலியாக உள்ள, ராஜ்யசபா, எம்.பி., பதவிக்கு நடைபெறும் இடைத் தேர்தலில் போட்டியிட, காங்., மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், 86, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ராஜஸ்தானில், மொத்தம், 10 ராஜ்யசபா, எம்.பி., பதவியிடங்கள் உள்ளன. பா.ஜ.,வைச் சேர்ந்த, மதன் லால் சைனி, இந்தாண்டு ஜூனில் காலமானார். வாய்ப்புஅதையடுத்து, இந்த இடத்துக்கு, வரும், 26ல் இடைத் தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு, இன்று கடைசி நாளாகும்.இந்நிலையில், 1991 முதல், அசாமில் இருந்து, தொடர்ந்து, ஐந்து முறை, ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலம், ஜூனில் முடிவுக்கு வந்தது.

அசாமில் போதிய பலம் இல்லாததாலும், வேறு எந்த மாநிலத்திலும் போட்டியிடும் வாய்ப்பு இல்லாததாலும், மன்மோகன் சிங், மீண்டும் ராஜ்யசபா, எம்.பி.,யாக முடியவில்லை.தற்போது, ராஜஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. அதனால், மன்மோகன் சிங், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாக உள்ளது. மன்மோகன், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டடால், அவர் பதவிக் காலம், 2024, ஏப்., 3ம் தேதி வரை இருக்கும்.

சட்டசபைஜெய்ப்பூரில் உள்ள ராஜஸ்தான் சட்டசபை வளாகத்தில், ராஜ்யசபா தேர்தல் அதிகாரியிடம், மன்மோகன் சிங், நேற்று தன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். முதல்வர், அசோக் கெலாட், துணை முதல்வர், சச்சின் பைலட், கட்சி மூத்த தலைவர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
14-ஆக-201907:43:11 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தக் கிழவனாருக்கு என்ன பணவெறி போறலியா சிங்குக்கு?????? இல்லே வூட்டுலே மனைவித்தொல்லை தாங்கலியா ??வயஷயாச்சுக்கம்னு வீட்டுலே இருக்கலாம் இங்கேவந்து சோனியாக்கிட்ட அவஸ்தைப்படணுமா தலைவிதியா??/
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X