பொது செய்தி

இந்தியா

'தேசிய குடிமக்கள் பதிவேடு மறுஆய்வு தேவையில்லை'

Added : ஆக 13, 2019
Advertisement

புதுடில்லி : 'அசாமில் மேற்கொள்ளப்பட்ட, என்.ஆர்.சி., எனப்படும், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மீண்டும் முதலில் இருந்து துவக்க வேண்டிய அவசியமில்லை' என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

வடகிழக்கு மாநிலமான அசாமில், அண்டை நாடான வங்கதேசத்தில் இருந்து வந்தவர்கள் அதிகமானோர் உள்ளனர். இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், உண்மையான குடியுரிமை பெற்றவர்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தும் வகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.இதன் வரைவு பட்டியல், கடந்தாண்டு வெளியிடப்பட்டது. அதில், 40 லட்சம் பெயர்கள் விடுபட்டிருந்தன. உத்தரவுஅதையடுத்து, விடுபட்டவர்கள் பெயர்களை சேர்ப்பது குறித்து மறுஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. வரும், 31ல் இறுதிப் பட்டியலை வெளியிட வேண்டும் என, உச்ச நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

வரைவு பட்டியல் அடிப்படையிலான அறிக்கை, சட்டசபையில், சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த கணக்கெடுப்பு தொடர்பான புள்ளி விபரங்கள், சமீபத்தில் ஊடகங்களில் வெளியாகின. அதில், வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகமான பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன; அதே நேரத்தில், பழங்குடியினர் அதிகம் உள்ள பகுதிகளில், பலரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.இது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதையடுத்து, கணக்கெடுக்கும் பணியை மீண்டும் முதலில் இருந்து துவக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

விசாரணை இந்த வழக்கு, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:சட்டங்களின் அடிப்படையிலேயே, இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. மீண்டும் முதலில் இருந்து கணக்கெடுப்பு நடத்த தேவையில்லை. அதே நேரத்தில், ஆதார் தகவல்களைப் போல, இந்த தகவல்களையும் மிகவும் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும்.பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் விபரங்கள், வரும், 31ல், ஆன்லைனில் வெளியிட வேண்டும். அதே நேரத்தில், பெயர் சேர்க்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை, அந்தந்த மாவட்ட நிர்வாகத்துக்கு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அமர்வு உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X