பழங்குடி மக்களுக்கு பிரியங்கா ஆறுதல்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (13)
Advertisement

வாரணாசி: உத்தர பிரதேச மாநிலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட, சோன்பத்ரா கிராமத்துக்கு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, இன்று(ஆக.,13) சென்றார்.






உ.பி.,யில், வாரணாசி அருகேயுள்ள சோன்பத்ரா என்ற கிராமத்தில், சமீபத்தில், நிலத் தகராறு காரணமாக, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மாதம், இந்த பகுதிக்கு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்றார், காங்., பொதுச் செயலர் பிரியங்கா. ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியங்கா போராட்டத்தில் ஈடுபட்டார்.








இதையடுத்து, அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு, பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில், இன்று மீண்டும், சோன்பத்ரா வந்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
15-ஆக-201923:09:14 IST Report Abuse
Rajesh ஆட்சியில் இருக்கும்போது எந்த ஆணியையும் பிடுங்காமல் இப்போது இதெல்லாம் வீன்.
Rate this:
Share this comment
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
14-ஆக-201911:46:13 IST Report Abuse
JIVAN கொலைகார கட்சியின் விசுவாசி
Rate this:
Share this comment
Cancel
KS Dilip -  ( Posted via: Dinamalar Android App )
14-ஆக-201907:47:29 IST Report Abuse
KS Dilip போட்டோ எடுத்தாச்சே.... கிளம்பு கிளம்பு
Rate this:
Share this comment
JIVAN - Cuddalore District,இந்தியா
14-ஆக-201911:39:48 IST Report Abuse
JIVANஅத சொல்லவேண்டியது உங்க பாசத்துக்குரிய மோடிக்கு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X