பழங்குடி மக்களுக்கு ஆறுதல்

Added : ஆக 13, 2019
Advertisement
 பழங்குடி மக்களுக்கு ஆறுதல்

வாரணாசி : உத்தர பிரதேச மாநிலத்தில், சமீபத்தில் ஏற்பட்ட நிலத்தகராறில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட, சோன்பத்ரா கிராமத்துக்கு, காங்., பொதுச் செயலர் பிரியங்கா, நேற்று சென்றார்.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, வாரணாசி அருகேயுள்ள சோன்பத்ரா என்ற கிராமத்தில், சமீபத்தில், நிலத் தகராறு காரணமாக, இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டது.இதில், பழங்குடியினத்தைச் சேர்ந்த, 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த மாதம், இந்த பகுதிக்கு வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறச் சென்றார், காங்., பொதுச் செயலர் பிரியங்கா. ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, போலீசார், அவரை தடுத்து நிறுத்தினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரியங்கா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவர் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்கு, பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்தனர். அவர்களுக்கு ஆறுதல் கூறிய பிரியங்கா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.இந்நிலையில், நேற்று மீண்டும், சோன்பத்ரா வந்த பிரியங்கா, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், அவர்கள் குறைகளையும் கேட்டறிந்தார்.ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப் பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது, அரசியல் சட்டத்துக்கு விரோதமான நடவடிக்கை.

எந்த ஒரு முக்கியமான முடிவையும் எடுக்கும் முன், அது குறித்து, அனைத்து தரப்பிலும் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். காஷ்மீர் விஷயத்தில், மத்திய அரசு, இந்த நடைமுறையை பின்பற்றவில்லை.பிரியங்கா, பொதுச் செயலர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X