கவலைப்பட தேவையில்லை!

Added : ஆக 13, 2019
Advertisement

புதுடில்லி : ''எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், படைகளை குவித்திருப்பது சாதாரண விஷயம் தான்; அதற்காக கவலைப்படத் தேவையில்லை,'' என, ராணுவ தளபதி, பிபின் ராவத் தெரிவித்தார்.

ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான், இந்த விவகாரத்தை பிரச்னையாக்க முயற்சிக்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஜம்மு - காஷ்மீரில் இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், படைகளை குவித்து வருகிறது.இது, இந்தியாவுக்கு அச்சுறுத்தல் எனவும், இந்தியா மீது தாக்குதல் நடத்த, பாகிஸ்தான் முயற்சிக்கிறது எனவும், செய்திகள் பரவின.

இது குறித்து, ராணுவ தளபதி, பிபின் ராவத்திடம் நேற்று கூறியதாவது:எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, வழக்கமான ஒன்று தான்.அதற்காக நாம் மிகவும் கவலைப்படத் தேவையில்லை. எனினும், பாகிஸ்தானின் அச்சுறுத்தலையும், தாக்குதலையும் எதிர்கொள்ள, நம் படைகள் தயாராகவே உள்ளன. எல்லையில் போர் பதற்றம் நீடிப்பது, பாகிஸ்தான் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பொறுத்து தான் அமையும். எனினும், நம் படைகளும், உஷார்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.இந்தியா மீது நேரடி போர்களில் தோல்வி அடைந்த பாகிஸ்தான், நீண்ட காலமாக, மறைமுக போரில் ஈடுபட்டுள்ளது.

காஷ்மீர் விவகாரத்தை எழுப்பி, எல்லையில் அல்லது நாட்டின் பிற பகுதிகளில் குண்டுவெடிப்பு போன்ற பயங்கரவாத செயல்களை, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் மேற்கொள்ளலாம் என, உளவு தகவல்கள்எச்சரிக்கின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X