பொது செய்தி

இந்தியா

கேரளாவில் இன்றும்,நாளையும் அதி தீவிர மழை;

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (6)
Advertisement

திருவனந்தபுரம்: கடந்த, ஒரு வாரத்திற்கும் மேலாக, மழையின் கோரப் பிடியில் சிக்கி, சீரழிந்து வரும் கேரளாவில், ஐந்து மாவட்டங்களில், 'ரெட் அலெர்ட்' எனப்படும், அதிதீவிர மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் பலத்த மழை பெய்யும் என்பதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.







475 பேர் பலி:


கேரளாவில், கடந்த ஆண்டு, ஆகஸ்ட், 15க்குப் பின், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்து, மலப்புரம், வயநாடு, இடுக்கி, எர்ணாகுளம், ஆலப்புழா மாவட்டங்களை சின்னாபின்னமாக்கியது. மழை மற்றும் வெள்ளத்தால், 475 பேர் பலியாகினர்; ஏராளமான வீடுகள், தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன; சாலைகள் துண்டிக்கப்பட்டன. அதுபோலவே, இந்த ஆண்டும், சில நாட்களுக்கு முன்னதாக, ஒரு வாரத்திற்கும் மேலாக, பலத்த மழை, இந்த மாவட்டங்களில் வெளுத்து வாங்குகிறது. இந்த முறை, மழை, வெள்ளத்துடன், நிலச்சரிவும் சேர்ந்ததால், ௯௦க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கவலபாரா என்ற மலை கிராமத்தில், நிலச்சரிவு ஏற்பட்டு, அந்த கிராமத்தின், 50 வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில், 40க்கும் மேற்பட்டோர், உயிருடன் மண்ணில் புதைந்து இறந்துள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில், 2.52 லட்சம் பேர், நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்காக, 1,332 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன; 8,500 வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், 'இன்றும், நாளையும், கேரளாவின், ஐந்து மாவட்டங்களிலும், இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள மாநிலங்களிலும், அதிதீவிர மழை பெய்யும்' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையால், மழை அதிகம் பெய்யக் கூடும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், கேரளாவின் இந்த மாவட்ட மக்கள், கவலை அடைந்துள்ளனர்.






சரி செய்தனர்:


இதற்கிடையே, கேரளாவின் மற்ற பகுதிகளில், நேற்று மழை நின்றதால், நிவாரண முகாம்களில் இருந்தவர்கள், வீடுகளுக்கு திரும்பி, அலங்கோலமாக கிடந்த பொருட்களை சரி செய்தனர். இந்நிலையில், மாநில முதல்வர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, பினராயி விஜயன், மழை பாதித்த, வயநாடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நிவாரண பணிகளை முடுக்கி விட்டார்.


வெளிநாட்டு மலையாளிகள் கேரளாவுக்கு உதவிக்கரம்:


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில், ஏராள மாக வசிக்கும் கேரள மாநிலத்தவர், தங்கள் சொந்த மாநிலத்தில், மழை, வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவ முன்வந்துள்ளனர். வளைகுடா நாடுகளில் பல்வேறு வேலைகளில் இருக்கும் அவர்கள், அங்கிருக்கும் மலையாளிகளிடம், தாராளமாக உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். புதிய ஆடைகள், பெண்களுக்கான சானிட்டரி நாப்கின்கள், சோப்பு, செருப்பு, ஆடைகள், பிஸ்கட், ஓட்ஸ் உணவுப்பொருட்கள் போன்ற வற்றை சேகரிக்க, ஆங்காங்கே, பொருள் சேகரிப்பு மையங்களை ஏற்படுத்தியுள்ளனர். இதற்காக, சமூக வலைதளங்களை பயன்படுத்தி, வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் வழங்குமாறும், பலர் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Manikandan Sivalingam - delhi,இந்தியா
14-ஆக-201919:16:08 IST Report Abuse
Manikandan Sivalingam ஒரு தேசத்தின் பாரம்பரிய இறையாண்மையை அழிக்க நினைத்ததன் கேடு.......இதே நிலை கேரளாவிற்க்கு 18 வருடங்களுக்கு..... இம்மாநிலத்தில் மதம் மாறிய கூட்டங்கள்..... கிருத்துவர்களாக இருந்தால் உங்கள் பூர்வ குடியான ஐரோப்பாவிற்கும்...... முஸ்லீம்களாக இருந்தால்..... அரேபியாவிற்கும் .....தப்பித்து.....அகதிகளாக சென்று விடவும்......இது பஞ்சபூதங்களின் அரசன் நடத்தும்...... ருத்ரதாண்டவம்....... கேரள தேசம் காப்பாற்ற ஒரே வழி தான் உண்டு,இதை கேரள மண்ணை ஆள்பவர்களும்.....மக்களும்.....தங்களின் உயிர் கடமையாக கொண்டு நிறைவேற்றியே ஆக வேண்டும்......இல்லை என்றால் கேரளம்....இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகின்ற பேரழிவு ஏற்படும்...... கேரள மாநிலத்தில் வருடக்கணக்கில் தேக்கி வைத்திருக்கும் நீரை கோடைகாலத்தில் அந்த மாநிலத்தின் குடிநீர்,விவசாய தேவை போக...... அனைத்து அணைகளின் நீரையும் தமிழக அணைகட்டுகளுக்கு திருப்பி விட வேண்டும்.......18 ஆண்டுகளுக்கு கேரளாவில் இதே மழை பொழிவு இருக்கும்....... இது கேரள அரசும்....மக்களும்......அந்நாட்டின் இறையாண்மையை நாசமாக்கியதற்கு கடவுள் கொடுத்த தீர்பு....... இதை விட வேறவொன்றும் கிடையாது.........
Rate this:
Share this comment
soundararajan - Udumalaipettai,இந்தியா
14-ஆக-201919:40:25 IST Report Abuse
soundararajanஅப்படியானால் , கர்நாடகா மற்றும் மும்பை, வட மாநிலங்களில் மழை வெள்ளம் எந்த காரணத்தினால் ? மொட்டை தலைக்கும் , முழங்காலுக்கும் முடிச்சு என்பது இதுதான். மேலும், அனைத்து நீரையும் தமிழகத்திற்கு திறந்து விட்டால், அதை கடலில் கொண்டு போய் கலந்து விடுவீர்கள். தருகிற நீரை சேமிக்க ஏதும் வழி உங்களிடம் உண்டா. காலகாலமாக அடுத்த மாநிலத்தையே எதிர்பார்த்துக்கொண்டு இருப்பதை விட ஆக்கபூர்வமாக எதாவது செய்ய அரசுக்கு கோரிக்கை வையுங்கள். அதை விடுத்து இன்னும் இலவசத்திற்காக தமிழ்நாட்டில் கையேந்துவது போல அடுத்த மாநிலத்திடம் கையேந்திக்கொண்டே இருக்க வேண்டியதுதான். பெய்கின்ற மழையை சேமிக்க வழி வகை செய்யுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஆக-201911:37:28 IST Report Abuse
Lion Drsekar இந்த மத மற்றும் ஜாதி வெறியர்கள் ஐயப்ப சாமியிடம் முதலில் மன்னிப்பு கேட்டாலே போதும், இறைவனின் முன்னால் எவனுமே முக்கியம் கிடையாது, இவனுங்களுக்கு இது இயற்க்கை, ஆனால் உலகுக்கு இது இறைவன், சென்ற முறை இதே மாதிரி மழை வெள்ளம், ஆனால் அணைத்து நீரையும் சேமித்து வைக்காமல் தண்ணீர் தட்டுப்பாடு வந்தது, முதலில் இறைவன் கொடுப்பதை சேமித்து வைக்க கற்றுக்கொள்ளுங்கள், வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
14-ஆக-201911:25:50 IST Report Abuse
முதல் தமிழன் Aiyappa punishes keralites.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X