பொது செய்தி

தமிழ்நாடு

'அணை நிரம்பும் வரை - அதிகாரி உத்தரவு

Added : ஆக 13, 2019
Advertisement

கோவை : சிறுவாணி அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்குவதற்கு, கேரள நீர் பாசனத்துறை அதிகாரிகளிடம் பேசுமாறு, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி உத்தரவிட்டார்.

மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில், சிறுவாணி அணை உள்ளது. அணை மொத்த உயரம், 50 அடி. கடந்த வாரம் தொடர்ச்சியாக கனமழை பெய்ததால், 9ம் தேதி, 42 அடியாக நீர்மட்டம் உயர்ந்திருந்தது. மழை தொடர்ந்தால், அணை நிரம்பி வழியும் என, அதிகாரிகள் எதிர்பார்த்தனர்.ஆனால், அணை நிலவரம் பற்றி, கேரள நீர்ப்பாசன அதிகாரிகள், தமிழகத்திற்கு தகவல் தெரிவிக்கவில்லை. அதேசமயம், கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதனால், நீர் மட்டம், நேற்று, 38 அடியாக குறைந்ததால், தமிழக குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், கோவை, தொண்டாமுத்துார் பகுதியில் நடந்த, அரசு விழாவிற்கு வந்த, உள்ளாட்சி துறை அமைச்சர், வேலுமணி, குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் செல்லமுத்துவிடம், சிறுவாணி அணை நிலவரத்தை கேட்டறிந்தார்.அப்போது, 'அணையின் முழு கொள்ளளவுக்கு நீர் தேக்க வேண்டும். அதற்கு முன்னதாக, தண்ணீர் திறந்துவிடக் கூடாது என, கேரள நீர்ப்பாசன துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். இவ்விஷயத்தில், கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்' என, அமைச்சர் அறிவுறுத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X