அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கொள்ளிடம் அணை கட்டும் பணி 2021ம் ஆண்டில் முடியும்'

Added : ஆக 13, 2019
Advertisement

திருச்சி : ''திருச்சி, முக்கொம்பில் கட்டப்படும் கொள்ளிடம் மேலணை பணிகள், 2021 மார்ச்சில் முடிவடையும்,'' என, தமிழக பொதுப்பணி துறை முதன்மை செயலர், மணிவாசகம் தெரிவித்தார்.

திருச்சி, முக்கொம்பில் உள்ள, கொள்ளிடம் மேலணை, கடந்த ஆண்டு, ஆக., 22ல் இடிந்தது. அதனால், அதன் அருகில், 387.60 கோடி ரூபாய் செலவில், புதிய அணையும்; 38.85 கோடி ரூபாய் செலவில், தற்காலிக தடுப்பணை பாலமும் கட்டப்பட்டு வருகிறது.கடந்த பிப்ரவரியில் துவங்கி, 2021ம் ஆண்டுக்குள், கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டது.இந்நிலையில் நேற்று, மேட்டூர் அணை திறக்கப்பட்டதால், முக்கொம்பு, கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக தடுப்பணைக்கும், புதிய அணை கட்டுமான பணிகளும் பாதிக்கும் நிலை உள்ளது என, விவசாய சங்க நிர்வாகிகள் புகார் தெரிவித்தனர்.

அதனால், தமிழக பொதுப்பணி துறை முதன்மை செயலர், மணிவாசன், நேற்று மாலை, முக்கொம்பு, கொள்ளிடம் அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அதன்பின் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:கொள்ளிடம் ஆற்றில், தற்காலிக தடுப்பணை பாலத்தில், 'கான்கிரீட்' அமைக்கும் பணி, நான்கு நாட்களில் முடிந்து விடும். காவிரியில், அதிக அளவு தண்ணீர் வரும் போது, தாக்குப்பிடிக்கும் வகையில், கான்கிரீட் தளம் வலுவாக அமைக்கப்பட்டுள்ளது.

காவிரியில், 2 லட்சம் கன அடி தண்ணீர் வந்தால் கூட, அதை கணக்கிட்டு, சமாளிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதனால், எவ்வளவு தண்ணீர் வந்தாலும், அணைக்கு, பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை.கொள்ளிடம் அணை கட்டுமான பணிகள், தொடர்ந்து நடைபெற்று, 2021 மார்ச்சில் நிறைவடையும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X