சிக்கிமில் எதிர்க்கட்சி கூண்டோடு காலி; 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்| Dinamalar

சிக்கிமில் எதிர்க்கட்சி கூண்டோடு காலி; 10 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் ஐக்கியம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (19)
Share
புதுடில்லி: வட கிழக்கு மாநிலமான, சிக்கிமில், எதிர்க்கட்சியான, சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க் கள், பா.ஜ.,வில் நேற்று, இணைந்தனர். இதையடுத்து, சிக்கிமின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை, பா.ஜ., பெற்றுள்ளது.சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் டமாங் தலைமையிலான, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில்,
சிக்கிம்,எதிர்க்கட்சி,கூண்டோடு காலி,ஐக்கியம்,MLA,B.J.P,BJP,Bharatiya Janata Party,எம்.எல்.ஏ.,பா.ஜ

புதுடில்லி: வட கிழக்கு மாநிலமான, சிக்கிமில், எதிர்க்கட்சியான, சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க் கள், பா.ஜ.,வில் நேற்று, இணைந்தனர். இதையடுத்து, சிக்கிமின் பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை, பா.ஜ., பெற்றுள்ளது.

சிக்கிமில், முதல்வர் பிரேம் சிங் டமாங் தலைமையிலான, சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா, 17 தொகுதிகளிலும், முன்னாள் முதல்வர், பவன் குமார் சாம்லிங் தலைமையிலான, சிக்கிம் ஜனநாயக முன்னணி, 15 தொகுதிகளிலும் வென்றன. பா.ஜ., ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த, இரண்டு பேர், தலா, இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றதை அடுத்து, தலா, ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தனர். இதனால், அந்த கட்சி, எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை, 13 ஆக குறைந்தது. இந்நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியின், 10 எம்.எல்.ஏ.,க்கள், நேற்று டில்லி வந்தனர். பா.ஜ., செயல் தலைவர், ஜே.பி.நட்டா, கட்சியின் வட கிழக்கு மாநிலங்களுக்கான பொறுப்பாளர், ராம் மாதவ் முன்னிலையில், பா.ஜ.,வில் இணைந்தனர்.

இது குறித்து, ராம் மாதவ் கூறுகையில், ''எதிர்க்கட்சியின் பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் இணைந்து உள்ளனர். ''இதனால், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. சிக்கிம் ஜனநாயக முன்னணியின் சட்டசபை உறுப்பினர்கள், பா.ஜ., உடன் இணைந்துள்ளதால், அவர்கள், இனி, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களாகவே கருதப்படுவர்,'' என்றார்.

பா.ஜ., வில் இணைந்த, எம்.எல்.ஏ.,க்கள் கூறுகையில், 'சிக்கிமில், விரைவில் தாமரை மலரும்' என்றனர். வட கிழக்கு மாநிலங்களில், சிக்கிமை தவிர, மற்ற அனைத்து மாநிலங்களிலும், பா.ஜ., அல்லது அதன் கூட்டணி கட்சிகளின் ஆட்சி தான் நடக்கிறது. தற்போது, சிக்கிமிலும், அந்த கட்சிக்கு, 10 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக, ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளிலும், அந்த கட்சி மேலிடம் இறங்கும் என, அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X