பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிறைவேறும்: முதல்வர் உறுதி

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement

மேட்டூர்: ''காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேறும்'' என தமிழக முதல்வர் பழனிசாமி பேசினார்.latest tamil newsமேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம் 120 அடி. நீர் கொள்ளளவு 93.47 டி.எம்.சி. ஆகும். கர்நாடகா அணைகளில் திறக்கப்பட்ட நீர் தொடர்ச்சியாக வந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 101 அடியாக உயர்ந்தது. காலை 9:50 மணிக்கு அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரியாற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி; கிழக்கு மேற்கு கால்வாயில் 1000 கன அடி நீரை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். தண்ணீர் எட்டு கண் மதகு வழியாக வெளியேறியது.

பின் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: மேட்டூர் அணை நிரம்ப வேண்டி திருப்பதி ஏழுமலையானிடம் வேண்டுதல் வைத்தேன். அவரது அருளாசியால் மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரித்து தற்போது பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. டெல்டாவில் 16.06 லட்சம் ஏக்கர் சாகுபடிக்கு 339 டி.எம்.சி. நீர் தேவை. மேட்டூர் அணையிலிருந்து 220 டி.எம்.சி. நீர் மற்றும் வடகிழக்கு பருவமழை மூலம் எதிர்பார்க்கப்படும் 119 டி.எம்.சி. நீர் மூலம் பாசன தேவை பூர்த்தி செய்யப்படும்.

காவிரி - கோதாவரி இணைப்பு திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும். அதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது. கரூர் அருகே காவிரியாற்றில் கோதாவரி நீர் வந்தடையும். அதற்கு கீழ் பகுதியில் கால்வாய் மூலமும் மேல் பகுதியில் நீரேற்று திட்டம் மூலம் தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படும். காவிரி கரையோரம் சுற்றுப்பகுதியிலுள்ள பிற நிலங்கள் பாசன வசதி பெறும்படி 25 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் நீரேற்று திட்டம் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


latest tamil newsதமிழகத்தில் பொதுப்பணித்துறை உள்ளாட்சி கட்டுப்பாட்டிலுள்ள 39 ஆயிரம் ஏரி, குளங்கள் துார்வாரப்படும். நீரை சேமிக்க காவிரி குறுக்கே மேலும் ஐந்து தடுப்பணை கட்டப்படும். கால்வாய் மண் கரைகளை கான்கீரிட் கரைகளாக அமைப்பதால் 20 சதவீத நீரை சேமிக்க முடியும். மத்திய அரசு அனுமதி பெற்று டெல்டா மாவட்டங்களிலுள்ள கால்வாய்கள் கான்கீரிட் கரைகளாக மாற்றப்படும். இவ்வாறு அவர் பேசினர்.


'ஸ்டாலினின் பொய்'


மேட்டூர் அணையில் நீர் திறந்த பின் முதல்வர் பழனிசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்றடையும்படி கால்வாய்களை துார்வார அரசு 66 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. 'நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் செல்லவில்லை' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பொய் தகவல் கூறுகிறார். கனமழை பெய்த மறுநாளே அமைச்சர் உதயகுமார் நீலகிரிக்கு சென்று மழை சேதங்களை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201916:50:58 IST Report Abuse
Endrum Indian இடப்பாடியார், இணைக்கப்படும் அல்ல இத்தனாந்தேதி இணைக்கப்படும் என்று சொல்லுங்க???அது போதும்???
Rate this:
Cancel
Nemam Natarajan Pasupathy - Hyderabad,இந்தியா
14-ஆக-201911:53:47 IST Report Abuse
Nemam Natarajan Pasupathy There is absolutely no need to concretize the banks of water channels. During Summer months and lean seasons, if the village action teams clears these channels of wild growth and rubbish, water will flow without any hindrance. Cementing the banks without proper backing with hard mud will make sure that these cement slabs will start falling within a year and block the passage even more. Also grass and other vegetation will grow in the cracks and gaps making the cement slab to lose its grip and fall in the water channel. If it all they want to pave these channels they should do it with locally available clay by making glazed terracotta tiles and interlock them while placing them. Concrete paving will lead to corruption and eating away money without any good result.
Rate this:
Cancel
PR Makudeswaran - Madras,இந்தியா
14-ஆக-201910:18:17 IST Report Abuse
PR Makudeswaran ஸ்டாலின் பொய் தான். சம்மதிக்கிறோம். உங்க பொய் ? முக்கொம்பை ஒரு வருடமாக செப்பனிடும் நீங்கள் அடுத்த மழையும் தண்ணீரும் வந்துவிட்டதே அதற்க்கு காய்ச்சல் ஏதும் வந்துவிட வாய்ப்பு ?. கோதாவரி வருவதை நம் பிள்ளைகளாவது பார்க்க முடியுமா? அறிவிப்பு பலம்தான். வேலை எந்த அளவுக்கு பூ சுற்றவேண்டாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X