அரசியல் செய்தி

தமிழ்நாடு

'சிதம்பரம் பூமிக்கு பாரம்': தி.மு.க., - காங்., கண்டனம்

Updated : ஆக 13, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (181)
Advertisement
சிதம்பரம், பூமி, பாரம், ஸ்டாலின்,காஷ்மீர், உரிமை ,பறிப்பு

சென்னை: சமீபத்தில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த 'காஷ்மீர் உரிமை பறிப்பு' கண்டன கூட்டத்தில் முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் பேசினார். அப்போது 'மத்திய அரசு தமிழக ஆட்சியை கலைத்தால் கூட இங்குள்ள அ.தி.மு.க. அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கும்; எதிர்த்துப் பேசாது' என்றார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அணை திறப்பு விழாவில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமியிடம் சிதம்பரம் பேச்சு குறித்து நிருபர்கள் நேற்று கருத்து கேட்டனர். அதற்கு பதிலளித்த முதல்வர் ''சிதம்பரம் இவ்வளவு காலமாக மத்திய அமைச்சராக இருந்திருக்கிறார். தமிழகத்திற்கு எந்த திட்டத்தையும் கொண்டு வரவில்லை. அவரால் நாட்டுக்கோ, தமிழகத்துக்கோ என்ன பயன் கிடைத்தது; அவரால் பூமிக்கு தான் பாரம்'' என்றார்.

சென்னையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அளித்த பதில்: முதல்வர் அவரது தகுதிக்கு மீறி பேசிஉள்ளார். மழையால் பாதிக்கப்பட்ட நீலகிரிக்கு சென்று வந்த என்னை பற்றியும் 'சீன்' காட்ட விளம்பரத்திற்காக போனதாக கூறினார். அவர் அமெரிக்காவுக்கும் லண்டனுக்கும் செல்வதாக செய்தி வந்திருக்கிறது. எனவே அவர் அமெரிக்கா லண்டனுக்கு சீன் காட்டத் தான் போகிறாரா என கேட்பதற்கு எனக்கு ரொம்ப நேரமாகாது. முதல்வர் இப்படி கீழ்த்தரமாக பேசக் கூடாது. இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில் சிதம்பரம் ஆதரவாளர்களும் முன்னாள் எம்.எல்.ஏ.க்களுமான என்.சுந்தரம் எம்.என்.கந்தசாமி, வி.ராஜசேகரன், ராம.அருணகிரி, ராம.சுப்புராம், ஆர்.எம்.பழனிசாமி, பி.எஸ்.விஜயகுமார், எஸ்.ராஜ்குமார், எம்.தண்டபாணி, வேல்துரை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை: பூமிக்கு யார் பாரம் என்பதும் தமிழகத்திற்கு யார் பாரம் என்பதும் மக்களுக்கு நன்றாக தெரியும்.

முதல்வரின் ஆணவ பேச்சு யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கத்திற்காகவும் தன் பதவியை தக்கவைக்கவும் பேசப்பட்டதாக தெரிகிறது. சிதம்பரம் என்ன திட்டங்கள் கொண்டு வந்தார்; என்னென்ன சாதனைகளை செய்தார் என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். இதுபோன்ற ஆணவ பேச்சை முதல்வர் நிறுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

தமிழக காங்.,தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை சிதம்பரம் பேசிய பேச்சுக்கு முதல்வர் உரிய பதிலைக் கூறாமல் பொறுப்பற்ற முறையில் விமர்சனம் செய்திருக்கிறார். ஒன்பது பட்ஜெட்டுகளை தாக்கல் செய்து பொருளாதார சீர்திருத்தம் செய்தவர் சிதம்பரம். கடந்த 2004 முதல் 2009ம் ஆண்டு வரை தொடர்ந்து மூன்றாண்டுகள் நாட்டின் வளர்ச்சி விகிதத்தை 9 சதவீதத்திற்கு மேல் உயர்த்தியதில் சிதம்பரம் பங்கை பாராட்டாமல் இருக்க முடியாது. முதல்வர் பழனிசாமிக்கு பாராட்ட மனம் இல்லை என்றாலும் சிறுமைப்படுத்தாமல் இருக்கலாமே. இவ்வாறு கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (181)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bharatha Nesan - Chennai,இந்தியா
20-ஆக-201918:26:07 IST Report Abuse
Bharatha Nesan சிதம்பரம் என்று அசகான பெயரை வைத்துக்கொண்டு இந்தியாவுக்கு இந்திய மக்களுக்கு எதிராக பதவிக்காகவும் பணத்துக்காகவும் காங்கிரஸிடம் சேர்ந்துகொண்டு, நாட்டுக்கு இவர் செயத துரோகங்கள் பல பல , அதற்காக இவர் தண்டிக்கப்பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
shan - jammu and kashmir,இந்தியா
20-ஆக-201909:51:45 IST Report Abuse
shan சிதம்பரத்தை சுற்றியுள்ள கொள்ளை காரனுக்கு பெனாமியில் சொத்து சேர்த்து வேண்டும் என்றால் கொடுத்திருக்கலாம்? 09 சத விகித வளர்ச்சி இந்த சிதம்பரத்தால் வரவில்லை பிஜேபி வாஜ்பாய் ஆட்சியில் போட்ட ரோடு கம்பெனி சீர் திருத்தங்களால இரண்டு மூன்று ஆண்டுகள் கழித்து அதன் வளர்ச்சி ஆரம்பம் ஆனது? இந்த கொள்ளைக்காரனால் வளர்ச்சி முன்னாள் சீர்திருத்தத்தால் வளர ஆரம்பித்து முளையிலேயே நசுங்கி விட்டது . சிதம்பரம் நல்லாட்சி செய்து இருந்தால் 10 ஆண்டும் வளர்ந்து இருக்க வேண்டும் அந்த மடையன் போகும் போது அதி பாதாளத்தில் விட்டு விட்டு சென்றான்? திரும்ப பிஜேபி வர போகிறது என்று 2013 கடைசி முதல் மீண்டும் உற்பத்தியாளர்களிடம் நம்பிக்கை வந்ததால் மீண்டும் துளிர் விட்டு ulladhu, முன்னாள் இந்த மடையன் வீழ்ச்சிக்கு உலக மந்தி காரணம் என்பான் இப்பொழுதும் சிரியா, லெபனான், ரஷ்ய அமெரிக்கா பிரச்சினை பிரெக்ஸிட் பிரச்சினை சீன அமெரிக்கா பிரச்சினை என்று இருந்தாலும் இவர்கள் அளவில்லை அது போக மூன்று லச்சம் கோடிக்கு ஆயுதங்களும் வாங்கி இருக்கிறது அந்த ஆட்சியில் ஊழல் மட்டுமே மிச்சமாகி இருந்தது . பொண்டாட்டி ஒருபக்கம் கோடி கோடியா சாரதா ஊழல் ராஜஸ்தானில் ஆம்புலன்ஸ் ஊழல், மகன் மேக்சிஸ் ஊழல் இப்படி ஊழல் நாயகன் பற்றி முதல்வர் சரியாதான் சொல்லியுள்ளார்
Rate this:
Share this comment
Cancel
DUBAI- Sivagangai babu Kalyan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஆக-201908:17:26 IST Report Abuse
DUBAI- Sivagangai babu Kalyan சொந்த சிவகங்கை தொகுதிக்கு என்ன பண்ணீனார் ?? காங்கிரஸ் அழகிரி , மற்றும் பசி ஆதரவாளர்கள் , தயவு செய்து சொல்லவும் , தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை , நாட்டுக்கு செஞ்சிட்டாராம்ம்மம் ... பூமிக்கு பாரம் , இந்தியா வுக்கு பாரம் , சிவகங்கை தொகுதிக்கு பாரம் . மகனுக்கும் , குடும்பத்துக்கும் சம்பாதித்து சேர்த்த சொத்தும் , பணமும் யாருடைய பணம் , எங்கள் வரி பணம் , மக்கள் பணத்தை திருடி சம்பாரித்து விட்டு , மக்களுக்கு , தமிழ் நாட்டுக்கு , இந்தியா வுக்கு பண்ணினார் ம், நல்லா பண்ணினார் ..அவர் வீட்டுக்கும் , சோனியா குடும்பத்துக்கும் ..முதல்வர் சொன்னது , மிக சரி ..
Rate this:
Share this comment
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
18-ஆக-201908:39:18 IST Report Abuse
Venkataramanan Thiruமற்றவர்கள் என்ன செய்துவிட்டனர் எவரைக்குறைச்சொல்ல.விவசாயிகள் கடன் அறுபதாயிரம் கோடி மக்களுக்கு மறந்துவிட்டதா?அவர் பைனான்ஸ் மினிஸ்டர் ஆஹா செய்தவற்றை மறந்து விட்டு , இவ்வாறு வன்முறையை தூண்டுவதுபோல் பேசுவது முதல்வருக்கு ஆபத்து....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
19-ஆக-201916:45:37 IST Report Abuse
Darmavan60 ஆயிரம் கோடி இவன்/பசி அப்பன் சொத்தில்லை....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X