கோர்ட் செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் வைபவத்தை நீட்டிக்க கோரி ஐகோர்ட்டில் முறையீடு! மேலும் 48 நாட்கள் தொடர உத்தரவிடும்படி கோரிக்கை

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 13, 2019 | கருத்துகள் (24)
Advertisement

சென்னை: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்க ஆர்வமாக இருப்பதால் காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்கள் நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. தினசரி லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகின்றனர். ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தரிசன நாட்களை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரியலுார் மாவட்டம் மீன்சுருட்டியைச் சேர்ந்த 78 வயதான தமிழரசி என்பவர் தாக்கல் செய்த மனு: அத்திவரதர் வைபவத்துக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை வருவர் என எதிர்பார்த்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் உண்மையான எண்ணிக்கை வேறு. முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. யூகத்தின் அடிப்படையில் கூட்டத்தை எதிர்பார்த்தனர்.

வைபவம் துவங்கிய ஒரு வாரத்தில் அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என பக்தர்கள் தெரிவித்தனர். கூட்டத்தை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் தயாராகவில்லை. 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் வைபவம் என்பதால் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஏராளமானோர் கூடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. எத்தனை கஷ்டப்பட்டாலும் ஒரு முறையாவது அத்திவரதரை பார்த்து விட மாட்டோமா என பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர். சராசரியாக ஆறு முதல் ஒன்பது மணி நேரம் வரை நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர். தண்ணீர் உணவு சுகாதார வசதிகள் போதிய அளவில் இல்லை.

லட்சக்கணக்கில் வரும் பக்தர்களுக்கு எட்டு கழிப்பறைகளை மட்டுமே மாவட்ட நிர்வாகம் வைத்துள்ளது; அதிலும் நெடி வீசுகிறது. கோவில் நுழைவு வாசலை எட்டுவதற்குள் பக்தர்கள் சோர்ந்து விடுகின்றனர். நானும் இரண்டு நாட்கள் சென்றேன்; ஏழு மணி நேரம்வரை காத்திருந்தேன். அத்திவரதரை தரிசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினேன். வயதானவர்கள் கர்ப்பிணிகள் மாற்று திறனாளிகளுக்கு கடுமையான அசவுகரியம் ஏற்பட்டது. அவர்களுக்கு தனி வரிசை அமைக்க கோரியதை மாவட்ட நிர்வாகம் பரிசீலிக்கவில்லை. கோவில் வளாகத்துக்குள் தான் சக்கர நாற்காலி வசதி அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கையை எடுக்கவில்லை.

பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர தமிழக அரசு 29 கோடி ரூபாயை ஒதுக்கியது. இதில் எவ்வளவு பயன்படுத்தப்பட்டது என்பது தெரியவில்லை. இரண்டு நாட்கள் காத்திருக்கும் வகையில் தகுந்த ஏற்பாடுகளுடன் வரும்படி கலெக்டரே கூறியிருப்பது துரதிஷ்டவசமானது. கூட்டத்தை நிர்வகிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றியிருந்தால் துரதிஷ்டவசமான சம்பவங்களை தடுத்து இருக்கலாம். நிர்வாகத்தின் தவறால் பக்தர்கள் பெரும்பாலோர் அத்திவரதரை தரிசிக்க முடியவில்லை.

எனவே கோவில் குளத்துக்குள் 17ம் தேதி அத்திவரதரை வைக்க தடை விதிக்க வேண்டும். பொதுமக்கள் தரிசனத்துக்காக ஒரு மண்டலம் என்ற அளவில் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக நீதிமன்றம் கூடியதும் நீதிபதி ஆதிகேசவலு முன் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜராகி ''லட்சக்கணக்கான பக்தர்கள் இன்னும் அத்திவரதரை தரிசிக்காததால் மேலும் 48 நாட்களுக்கு தரிசன வைபத்தை நீட்டிக்க வேண்டும்'' என்றார். மனு தாக்கல் செய்யும்பட்சத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி ஆதிகேசவலு தெரிவித்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.


மதுரை கிளையிலும் முறையீடு:


சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.புகழேந்தி அமர்வு முன் வழக்கறிஞர் ராஜகோபால் நேற்று ஆஜரானார். அவர் முறையிட்டதாவது: காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனம் 48 நாட்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. தினமும் அங்கு அதிகளவில் பக்தர்கள் சென்று வருகின்றனர். சுவாமியை பலர் தரிசனம் செய்ய முடியவில்லை. தரிசனத்தை 108 நாட்களாக உயர்த்த வேண்டும். இதை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் மனு தாக்கல் செய்ய எனக்கு அனுமதிக்க வேண்டும் இவ்வாறு அவர் முறையிட்டார். நீதிபதிகள் 'இவ்விவகாரம் சென்னை உயர்நீதிமன்றம் அதிகார வரம்பிற்கு உட்பட்டது. அங்கு மனு தாக்கல் செய்து நிவாரணம் தேடலாம்' என்றனர்.
Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201916:55:03 IST Report Abuse
Endrum Indian எப்போ பார்த்தாலும் வேலை வெட்டி இல்லாத தண்டப்பசங்களுக்கு ஒரே வேலை எதையும் கோர்ட்டுக்கு கொண்டு செல்வது??அத்திவரதா இவங்களுக்கு ஒரு நல்ல பாடம் கற்றுக்கொடு.
Rate this:
Share this comment
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
14-ஆக-201914:58:13 IST Report Abuse
Lion Drsekar இன்றைக்கு தமிழகத்தில் முக்கிய கடவுள் அத்திவாரதர்தான், அந்நிய சக்திகளுக்காக ஒளித்து வைக்கப்பட்டவர்தான் இந்த பெருமாள் . ஆகவே மீண்டும் குளத்தில் வைப்பது மா பெரும் குற்றம், எது எப்படியோ இல்லையோ தங்க பல்லியை வைத்து பணம் பறிக்கும் கூட்டம் இனி அத்திவாரதர் பெருமாள் குளத்தில் வைக்கப்பட்டாலும் பக்தர்கள் அலை மோதும், இதற்கும் டிக்கெட் போட்டு பணம் பறிக்க தயாராக இருப்பார்கள் நம்மவர்கள், வாழ்க .. வந்தே மாதரம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஆக-201914:45:00 IST Report Abuse
Pugazh V மரண வேதனையின் உச்சம். மேலும் இதில் மகாபாவம் 10-12 வயதுள்ள சிறுவர் சிறுமியர். இவர்களை இடுப்பிலோ தோளிலோ தூக்கிச் செல்லவும் முடியாது, கனமாக இருப்பார்கள், அவர்களால் நடக்கவும் முடியாத சூழல், ஒற்றைகாலைத் தூக்கி வைத்துக் கொண்டு குழந்தைகள் கதறி அழுவதைப் பார்க்கும் பொழுது, இதயத்தில் ரத்தம் வடிகிறது// இது நிஜம் என்றால் இவ்வளவு கஷ்ட்டப்பட்டு தரிசனத்துக்கு செல்ல வேண்டுமா? தூணிலும் துரும்பிலும் இருக்கும் நாராயணனை நெஞ்சார நினைத்து வீட்டின் அருகில் உள்ள ஆலயங்களில் தரிசித்தால் போறாதா?
Rate this:
Share this comment
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201916:56:29 IST Report Abuse
Endrum Indianமெக்காவில் சென்று கல்லெறிந்து கொண்டே சுற்றி சுற்றி வரலாம்???...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X