அரசியல் செய்தி

தமிழ்நாடு

நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம்: அன்புமணி

Added : ஆக 13, 2019
Advertisement

அவனியாபுரம் : ''நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அணைகள், தடுப்பணைகளை கட்ட வேண்டும்,'' என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

மதுரையில் அவர் கூறியதாவது: உலக நாடுகள் பருவ நிலை மாற்றத்திற்குகேற்ப நடந்து கொள்கின்றன. எதிர்காலத்தில் பெரு வெள்ளம், கடும் வறட்சி மாறி மாறி வர இருக்கிறது. அதற்கு ஏற்ப மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். உயிரிழப்புக்கள் ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும்.

கேரளா, அசாம், மும்பை, கர்நாடகாவில் கடும் வெள்ளம். ஆனால் தமிழகத்தில் குடிக்க தண்ணீர் இல்லை. ஆக.15ல் தமிழகத்தில் கிராம சபை கூட்டங்களில் காலநிலை அவசரம் குறித்து சிறப்பு தீர்மானங்களை நிறைவேற்றி மக்கள் கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும். காவிரியில் எட்டு ஆண்டுகளுக்கு முன் வரை ஆண்டுதோறும் ஜூன் 12 மேட்டூர் அணை திறக்கப்படும். தற்போது ஆக.13ல் திறக்கப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை.

கர்நாடகா அணைகளில் தண்ணீர் நிரம்பியபின்பு உபரிநீரைத்தான் வழங்குகின்றனர். தற்போது திறக்கப்பட்டுள்ள அதிக தண்ணீர்மூலம் 2 நாட்களில் மேட்டூர் அணை நிரம்பி விடும். அணை நிரம்பியபின்பு உபரிநீர் கடலில் கலக்கும். கடந்த ஆண்டு 140 டி.எம்.சி., தண்ணீர் கடலில் கலந்தது. தமிழகத்தில் தண்ணீரை தேக்க வசதியில்லை, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X