சுஷ்மா சுவராஜுக்கு மோடி புகழாஞ்சலி

Added : ஆக 13, 2019
Advertisement

புதுடில்லி : மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி "வெளியுறவு அமைச்சகத்தின் முகத்தை மாற்றியவர்" என புகழாரம் சூட்டினார்.

பா.ஜ. மூத்த தலைவரும் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான சுஷ்மா சுவராஜ் சமீபத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:நான் பிரதமரான பிறகு ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜுடன் அமெரிக்கா சென்றேன். ஐ.நா. சபை கூட்டத்தில் பேசுவதற்கான உரை தயாரா என அவர் கேட்டார். எழுதி வைத்து பேசும் வழக்கம் கிடையாது என்றேன். நீங்கள் சிறந்த பேச்சாளராக இருக்கலாம்.

ஆனால் ஐ.நா. சபை கூட்டத்தின் மரபுபடி எழுதி வைத்து தான் பேச வேண்டும். அப்போது தான் நம் நாடு குறித்து அதிகமாக பேச முடியும் என்றார்.அவரிடம் இருந்து நான் பல விஷயங்களை கற்றுள்ளேன். வெளியுறவு அமைச்சகம் என்பது ஒரு வரைமுறையின்படி தான் செயல்படும். ஆனால் தன் சிறப்பான நடவடிக்கையால் மக்கள் சுலபமாக தொடர்பு கொள்ளும் வகையில் மாற்றியவர்.

இவ்வாறு அவர் பேசினார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், பா.ஜ. செயல் தலைவர் ஜே.பி. நட்டா, காங். மூத்த தலைவர் ஆனந்த் சர்மா, திரிணமுல் காங்.கின் தினேஷ் திரிவேதி, பிஜு ஜனதா தளத்தின் பினாகி மிஸ்ரா, லோக் ஜனசக்தி தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான், சிவசேனாவின் அரவிந்த் சாவந்த் என பலரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X