'ஹிந்து பாக்' சர்ச்சை கருத்து; சசி தரூருக்கு கைது 'வாரன்ட்'

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (35)
Advertisement

கோல்கட்டா : 'பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறும்' என, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய, காங்., - எம்.பி., சசி தரூருக்கு எதிராக, கோல்கட்டா நீதிமன்றம், கைது, 'வாரன்ட்' பிறப்பித்துள்ளது.






கேரள மாநிலம், திருவனந்தபுரம், காங்., - எம்.பி.,யாக இருப்பவர், சசி தரூர். முன்னாள் மத்திய அமைச்சரான இவர், கடந்த ஆண்டு, ஜூலையில், திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், '2019-ம் ஆண்டு நடக்க உள்ள, லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்று, பா.ஜ., மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தியா, ஹிந்து பாகிஸ்தானாக மாறும்' என்றார். இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

சசி தரூரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த, பா.ஜ., 'அவர், மன்னிப்பு கேட்க வேண்டும்' என, கோரியது. ஆனால், சசி தரூர் மறுத்துவிட்டார். இதையடுத்து, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், சசி தரூருக்கு எதிராக, அந்த சமயத்தில், வழக்கறிஞர் சுமித் சவுத்ரி தாக்கல் செய்த மனுவில், 'சசி தரூரின் கருத்து, மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளது. அரசியல் சட்டத்தை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. அவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறியிருந்தார்.





இந்த மனு தொடர்பாக, நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி சசி தரூருக்கு, 'சம்மன்'கள் அனுப்பப்பட்டன. ஆனால், அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று(ஆக.,13) விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட், தாஸ் குப்தா, சசி தரூர் மீது, கைது வாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
15-ஆக-201906:57:52 IST Report Abuse
skv srinivasankrishnaveni இவனெயெல்லாம் தேர்தல்ல நிக்கவச்சது பெரும் தவறு கொலை செய்துட்டு சுதந்திரமவுலாவாறான் குற்றவாளிகளேதான் எம்பி எம் எல் ஏ வாக இருக்கணும்னு நம்மநாட்டின் தலைவிதி மண்டைல எழுதிருக்கா
Rate this:
Share this comment
Cancel
Nisha Rathi - madurai,இந்தியா
14-ஆக-201913:39:34 IST Report Abuse
Nisha Rathi இவனுக்கு கொடுக்கும் தண்டனை எல்லா இந்தியா மண்ணுக்கு எதிராக பேசுபவர்களுக்கு படமாக இருக்கவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Rameeparithi - Bangalore,இந்தியா
14-ஆக-201912:57:46 IST Report Abuse
Rameeparithi கைது பண்ணி களிய திங்க வைச்சு வாய் கொட்டத்தை அடக்குங்க கணம் நீதிபதி அவர்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X