பொது செய்தி

தமிழ்நாடு

காவிரி கரையோர மாவட்டங்களுக்கு மத்திய ஜலசக்தி அமைச்சகம் எச்சரிக்கை

Added : ஆக 14, 2019
Advertisement

சென்னை : மத்திய ஜல சக்தி அமைச்சகம் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து, காவிரி கரையோரம் அமைந்துள்ள, 12 மாவட்டங்களில், பாதிப்பு ஏற்படாமலிருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி, கலெக்டர்களுக்கு, வருவாய் நிர்வாக ஆணையர், சத்யகோபால் உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவு:கர்நாடகா மற்றும் கேரளாவில், கனமழை பெய்து வருகிறது. கிருஷ்ணராஜ சாகர் அணை மற்றும் கபினி அணையிலிருந்து, 2.25 லட்சம் கன அடி நீர், தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு செல்கிறது. இதனால், தேவையான முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுங்கள் என, தமிழக அரசுக்கு, மத்திய ஜல சக்தி அமைச்சகம், எச்சரிக்கை விடுத்துள்ளது.
கர்நாடகாவிலிருந்து தொடர்ந்து தண்ணீர் வந்தால், மேட்டூர் அணையிலிருந்து, தொடர்ந்து தண்ணீர் திறந்து விடப்படும். எனவே, காவிரி கரையோரம் அமைந்துள்ள, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலுார், தஞ்சாவூர், திருவாரூர், கடலுார் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர்கள், தேவையான வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஆற்றில், எவ்வளவு தண்ணீர் திறந்து விடப்படுகிறது என்ற விபரத்தை, அவ்வப்போது விளம்பரப்படுத்த வேண்டும். காவிரி ஆறு, கால்வாய் மற்றும் நீர்நிலைகளில், மக்கள் குளிக்க, நீச்சலடிக்க, மீன் பிடிக்க தடை விதிக்க வேண்டும்.

ஆபத்தான இடங்களில், மக்கள், 'செல்பி' புகைப்படம் எடுப்பதை தவிர்க்கும்படி, அறிவுரை கூற வேண்டும்.குழந்தைகளை, நீர்நிலைகளுக்கு அழைத்து செல்ல வேண்டாம் என, பெற்றோர்களுக்கு அறிவுரை கூற வேண்டும்.தண்ணீர் திறந்து விடும் நேரங்களில், ஆற்றை கடப்பதை, விவசாயிகள் மற்றும் மக்கள் தவிர்க்க வேண்டும். விலங்குகளை அழைத்து செல்லக் கூடாது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை, பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து செல்ல வேண்டும். மண்டல குழு, மாநில பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசார், ஆற்றின் கரையோரம் ரோந்து செல்ல வேண்டும்.

நிவாரண முகாம்களில், போதுமான குடிநீர், உணவு, மருந்து பொருட்களை, போதிய அளவு இருப்பு வைக்கவேண்டும்.பாலங்கள் மற்றும் சிறு பாலங்களில் உள்ள அடைப்புகளை நீக்க வேண்டும். இவ்வாறு, சத்யகோபால் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X