அரசியல் செய்தி

தமிழ்நாடு

'எதற்கெடுத்தாலும் அரசியல், விளம்பரம்!'

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (4)
Advertisement
 'எதற்கெடுத்தாலும்  அரசியல், விளம்பரம்!'

சென்னை : ''தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வெள்ள நிவாரணப் பணிகளில் கூட, அரசியல் செய்கிறார்,'' என, தமிழக, பா.ஜ., தலைவர், தமிழிசை கூறினார்.

அவர் அளித்த பேட்டி:தமிழகத்தை பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான அரசியலை முன்னெடுத்து செல்வது, எங்கள் குறிக்கோள். 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு, காஷ்மீர் மறு சீரமைக்கப்பட்டுள்ளது. இதை, தமிழக மக்கள் வரவேற்கின்றனர்.அதன் உண்மை தன்மையை அறிந்த, நடிகர் ரஜினி ஆதரவு கருத்து தெரிவித்தார். ரஜினி குரல், தமிழக மக்களின் குரலாக ஒலிக்கிறது. காஷ்மீர் மறு சீரமைப்பிற்கு, இளைஞர்கள் முழு ஆதரவு தந்துள்ளனர்.காஷ்மீரில் கல் எறிந்தவர்கள், தற்போது, கல்வி அறிவு பெற உள்ளனர். காஷ்மீர் விவகாரத்தில், நல்ல முடிவு எடுக்கப்பட்டதை ஏற்க முடியாமல், சிலர் எதிர்க்கின்றனர்.

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட வேண்டும். தேர்தல் தள்ளிப்போனதற்கு, தி.மு.க., காரணம். ஸ்டாலின், எதை எடுத்தாலும், அரசியல் செய்கிறார். வெள்ள நிவாரண பணிகளில் கூட, அரசியல் செய்கிறார். அனைத்திலும், அவருக்கு விளம்பரம் தேவைப்படுகிறது. காஷ்மீருக்கு, சர்வ கட்சியினரை அழைத்து செல்வதாக, ஸ்டாலின் கூறும் அளவுக்கு, உரிமை கிடைத்திருப்பதற்கே, பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா எடுத்த, துணிச்சலான முடிவு தான் காரணம்.இவ்வாறு, தமிழிசை கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
17-ஆக-201912:14:19 IST Report Abuse
Malick Raja இதை யாருமே சீண்டுவதே இல்லை .. கேட்பாரும் இல்லை .. பார்ப்போரும் இல்லை என்ற நிலையில் இவரது கட்சியும் இவரும் இருப்பதும் உலகறிந்த ஒன்று .. இருந்தாலும் இருப்பை காண்பிக்க எதிலாவது மூக்கை நுழைப்பது இவரது வாடிக்கை .. கேட்போரும் பார்ப்போரும் இல்லாத அநாதை
Rate this:
Share this comment
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
14-ஆக-201919:51:03 IST Report Abuse
Rajagopal இந்தியாவின் அடுத்த காஷ்மீர் நம் தமிழகம்தான். காஷ்மீர் தலை என்றால் தமிழகம் கால். தலைவலி போய் கால் வலி வர இருக்கிறது. சீமான் போன்றவர்கள் தனி தமிழ் தேசம் என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அரசு எதைக் கொண்டு வந்தாலும் அதை எதிர்த்து வர விடாமல் தடுக்கிறார்கள். இதனால் தமிழர்களுக்கு வரும் இழப்பைப் பெரிது படுத்தி, அவர்களின் கோபத்தை மீண்டும் சர்வாதிகார மத்திய அரசுதான் காரணம் என்று முழங்கி, அதையும் தங்களுக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்வார்கள். தமிழகத்து ஷேக் அப்துல்லா மாதிரி சீமான் தன்னைத் தயார் செய்து கொண்டிருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
14-ஆக-201915:43:59 IST Report Abuse
Endrum Indian விளம்பரம் இல்லாமல் நானில்லை, விளம்பரமே நான் ஆவதில்லை, எனக்கொரு விளம்பரம் இருக்கின்றது என்னை அது காக்கின்றது, ஜீவநதியாய் வரும் விளம்பரம், என் பண பண பண தாகம் தீர்த்து மகிழும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X