பொது செய்தி

தமிழ்நாடு

உச்சத்திலும் உச்சம் தொட்டது தங்கம்; பவுன் ரூ.29 ஆயிரத்தை தாண்டியது

Updated : ஆக 14, 2019 | Added : ஆக 14, 2019 | கருத்துகள் (5)
Advertisement
உச்சம், தங்கம்,வெள்ளி,பவுன், விலை உயர்வு

சென்னை: தமிழகத்தில் தங்கம் விற்பனையில் முதல் முறையாக 22 காரட் ஆபரண தங்கம் பவுன் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது.

அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்ட சர்வதேச நிலவரங்களால் அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்து வருகிறது. இதனால் டாலரில் அதிகளவில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதையடுத்து சர்வதேச சந்தையில் ஜூலை இறுதியில் இருந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் தங்கம் விலை எப்போதும் இல்லாத வகையில் அதிகரித்து வருகிறது.

கடந்த 1ம் தேதி கிராம் தங்கம் 3,310 ரூபாய்க்கும் பவுன் 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் விற்றது. அதற்கு அடுத்த நாளே கிராம் 3,383 ரூபாயாகவும் பவுன் 27 ஆயிரத்து 64 ரூபாயாகவும் அதிகரித்து புதிய சாதனை படைத்தது. பின் ஐந்து நாட்களில் அதாவது 7ம் தேதி கிராம் தங்கம் 3,547 ரூபாய்; பவுன் 28 ஆயிரத்து 376 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியது. நேற்று முன்தினம் கிராம் தங்கம் 3,603 ரூபாய்க்கும் பவுன் 28 ஆயிரத்து 824 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. கிராம் வெள்ளி 49 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில் நேற்று தங்கம் கிராமுக்கு 24 ரூபாய் அதிகரித்து 3627 ரூபாய்க்கு விற்பனையானது. பவுன் 192 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 16 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து முதல் முறையாக பவுன் விலை 29 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. இரு வாரத்தில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு 2,536 ரூபாய் உயர்ந்துள்ளது. மாத இறுதிக்குள் 30 ஆயிரம் ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
14-ஆக-201915:03:09 IST Report Abuse
Ashanmugam ஏழை எளிய பாமர மக்களின் கல்யாண கனவு அதோ கதிதான். பிஜேபி ஆட்சி முடியும் பொழுது சவரன் 8 கிராம் விலை 1 லட்சம் தொடும். இவர்களுக்கு என்ன கவலை? ஓட்டு போட்ட மக்கள் வாழ்ந்தா என்ன செத்தா என்ன? அவர்களுக்கு தேவை பதவி சுகம், ராஜ மரியாதை, கோடான கோடி பணம், கோடான கோடி அசையும், அசையா சொத்துக்கள் ஆகியவை. மக்களின் வாழ்க்கை தரம், வேலை வாய்ப்பு, வருமானத்திற்கு வழி, தொழில் முனைவோர் வட்டில்லா மூலதனம் ஆகியவற்றை பற்றி மோடிஜி அரசு சிந்திப்பதில்லை. விஷம் போல் ஏறிய விலைவாசியை இனி எந்த கொம்பனாலும் இறக்க முடியாது கட்டுப்படுத்தவும் முடியாது. ஓ.கே. அப்படியென்றால், அதற்கு தகுந்தாற்போல் சம்பளத்தை உயர்த்த வேண்டும். ஒருபக்கம் விலை உயர்வு மறுபக்கம் சம்பளம் குறைவு. எப்படி ஏழை எளிய பாமர நடுத்தர மக்கள் எதிர் நீச்சல் போட முடியும் என்பதை மோடிஜி அரசாங்கம் சிந்தித்து செயல் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
rambo - Manamadurai,இந்தியா
14-ஆக-201911:24:48 IST Report Abuse
rambo இந்திய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது.. பல வேலையிழப்புகளால் மக்கள் கையில் பணமில்லை.. அதனால் பொருள், வீடு என்று அனைத்து விற்பனையும் சரிந்து சரக்குகள் தேங்கியுள்ளன, சரக்குகள் தேங்கியுள்ளதால் அனைத்து துறை நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்துள்ளது, அதனால் அதன் பங்குகள் விலைகுறைக்கிறது, அதனால் அந்நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கின்றனர். அதனால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைகிறது, அதனால் பல சிறுமுதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை பங்குசந்தையிலிருந்து எடுத்து தங்கத்தில் போடுகின்றனர் இதனால் தங்கம் விலை ஏறுகிறது..
Rate this:
Share this comment
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
14-ஆக-201907:05:10 IST Report Abuse
அம்பி ஐயர் பேசாமல் ஒரு கிராம் ஒரு லட்சம் என்று நிர்ணயம் செய்துவிடுங்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X