பொது செய்தி

இந்தியா

முட்டைக்கு அதிக விலை ஓட்டல்களுக்கு கிடுக்கிப்பிடி

Added : ஆக 14, 2019
Advertisement

புதுடில்லி : ''ஐந்து நட்சத்திர ஓட்டல்களில், வாழைப்பழம், முட்டை போன்ற உணவு பொருட்களுக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன.

இது குறித்து, ஓட்டல் நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்படும்,'' என, மத்திய உணவுத் துறை அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.அமைச்சர், ராம்விலாஸ் பஸ்வான், டில்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:பாலிவுட் நடிகர் ராகுல் போஸ், சண்டிகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில், இரண்டு வாழைப்பழங்களுக்கு, 442 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக, சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். மற்றொரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், இரண்டு ஆம்லேட்டுகளுக்கு, 1,700 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக புகார் வந்துள்ளது.

உணவு பொருளுக்கு, சந்தை விலையை விட, கூடுதல் விலை வைத்து, கட்டணம் வசூலிப்பது, நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கை. சம்பந்தபட்ட ஓட்டல் நிர்வாகங்களிடம் விளக்கம் கேட்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X