'வழக்கமான அளவு நீர் தான் வருகிறது' காவிரி ஒழுங்குமுறை குழு அறிவிப்பு

Added : ஆக 14, 2019
Advertisement

'தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள, எட்டு அணைகளுக்கு வரும் நீர், பில்லிகுண்டுலுவிலிருந்து வெளியேறும் நீர், வழக்கமான அளவிலேயே உள்ளது' என, காவிரி ஒழுங்குமுறை குழு தெரிவித்துள்ளது.

புள்ளி விபரம்காவிரி நதிநீர், ஒழுங்குமுறைப்படுத்தும் குழுவின் ஆலோசனை கூட்டம், டில்லியில், குழுவின் தலைவர், நவீன்குமார் தலைமையில், மத்திய நீர்வள ஆணைய அலுவலகமான சேவா பவனில், நேற்று நடைபெற்றது.ஆலோசனையில், இக்குழுவின் உறுப்பினர்களாக உள்ள தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின், தொழில்நுட்ப பிரதிநிதிகள் பங்கேற்றனர்.தமிழக அரசு சார்பில், திருச்சி மண்டல பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர், ராமமூர்த்தி, காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர், சுப்ரமணியம், உறுப்பினர், பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டம் துவங்கியதும், நான்கு மாநிலங்களின் தொழில்நுட்ப பிரதிநிதிகளும், காவிரி நதிநீர் தொடர்பான, தங்கள் தரப்பு புள்ளி விபரங்களை சமர்ப்பித்தனர்.அவற்றை ஆய்வு செய்த பின், ஒழுங்குமுறை குழுவின் தலைவர், நவீன் குமார் கூறியதாவது:கூட்டத்தில், காவிரி நதியின், நீர்ப்பிடிப்பு பகுதி களில் பெய்து வரும் மழை பொழிவு நிலவரங்கள் ஆராயப்பட்டன.மழை அதிகம்அதன்படி, பில்லிகுண்டுலு வரையிலான, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், 12ம் தேதி வரை பெய்த மழை, வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஆனால், அதற்கு கீழ் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதிகளில், குறைந்த அளவே மழை பெய்து உள்ளது. தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள, எட்டு அணைகளுக்கும் வரும் நீரின் அளவும், பில்லிகுண்டுலுவிலிருந்து வெளியேறும் நீரின் அளவும் ஆராயப்பட்டது. இவை இரண்டுமே, வழக்கமான அளவையே காட்டுகின்றன.இவ்வாறு, நவீன்குமார் கூறினார். இதன் மூலம், கன மழையால், காவிரியில், வரலாறு காணாத அளவில், வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது என, பலரும் கருதிக் கொண்டிருக்கும் நிலையில், பில்லி குண்டுலுவிலிருந்து தமிழகத்துக்கு வரும் நீர், வழக்கமான அளவு தான் என்பது கவனிக்கத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X