அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினி

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (10)
அத்திவரதரை தரிசித்தார் நடிகர் ரஜினி

காஞ்சிபுரம்: நள்ளிரவில் அத்திவரதரை நடிகர் ரஜினி தரிசித்தார். காஞ்சி வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பின் அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த ஜூலை 1 முதல் 48 நாட்கள் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. ஆக.,17ம் தேதி கோவில் குளத்துக்குள் அத்திவரதர் சிலை மீண்டும் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நள்ளிரவில் நடிகர் ரஜினி, மனைவி லதாவுடன் அத்திவரதரை தரிசித்தார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் மனைவி லதா, தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அத்தி வரதரை தரிசித்தார் என்பது குறிப்பிடதக்கது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X