தகுதி நீக்கத்தை எதிர்த்த மனு உடனே விசாரிக்க கோரிக்கை

Added : ஆக 14, 2019
Advertisement

புதுடில்லி : 'தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, உடனே விசாரணை நடத்த வேண்டும்' என, காங்., மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்கள், உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கர்நாடகாவில், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்., கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த, 17 எம்.எல்.ஏ.,க்கள், கடந்த மாத துவக்கத்தில் ராஜினாமா செய்தனர். இதையடுத்து, குமாரசாமி அரசு, கடந்த, 22ல் கவிழ்ந்தது.கடிதம்ராஜினாமா செய்த, எம்.எல்.ஏ.,க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில், அப்போதைய சபாநாயகர், ரமேஷ் குமாரிடம் கடிதம் வழங்கப்பட்டது.

அதை பரிசீலித்த சபாநாயகர், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ரமேஷ் ஜார்கிகோளி, மகேஷ் குமட்டள்ளி, சுயேச்சையாக போட்டியிட்டு காங்கிரசில் சேர்ந்த சங்கர் ஆகிய, மூன்று, எம்.எல்.ஏ.,க்களை, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ், கடந்த, 25ல், தகுதி நீக்கம் செய்தார். இதையடுத்து, கர்நாட காவில், பா.ஜ., சார்பில் புதிய அரசு அமைக்கப்பட்டது. அக்கட்சியை சேர்ந்த எடியூரப்பா, 26ல்,முதல்வராக பதவியேற்றார்.

இந்நிலையில், ராஜினாமா செய்த, காங்கிரசை சேர்ந்த, 11 எம்.எல்.ஏ.,க்களையும், மதச்சார்பற்ற ஜனதாதளத்தை சேர்ந்த மூன்று, எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் ரமேஷ்குமார், கடந்த, 28ம் தேதி, தகுதி நீக்கம் செய்தார்.மேலும், 'கட்சித்தாவல் தடை சட்டத்தின்படி, தற்போதைய, 15-வது கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் முடிவடையும் வரை, தகுதி நீக்கம் செய்யப்பட்ட, 17 எம்.எல்.ஏ.,க்களும்,தேர்தலில் போட்டியிட முடியாது' என, அறிவித்தார். இதன்பின், கர்நாடக சட்டசபையில், கடந்த, 29ல் நடந்த நம்பிக்கைஓட்டெடுப்பில், முதல்வர் எடியூரப்பா வெற்றி பெற்றார். சபாநாயகர் பதவியை, ரமேஷ் குமார் ராஜினாமா செய்தார்.

ஜனநாயக விரோதமானதுஇதற்கிடையே, தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மனு தாக்கல் செய்தனர்.மனுவில், 'எங்களை தகுதி நீக்கம் செய்து, சபாநாயகர் உத்தரவிட்டது, ஜனநாயக விரோதமானது. எங்களின் கருத்தை, அவர் சிறிதும் கேட்கவில்லை. அவர் கட்சி சார்பாக நடந்து கொண்டு, தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். எங்கள் தகுதி நீக்கத்தை, ரத்து செய்ய வேண்டும்' என, கூறியிருந்தனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில், நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன், வழக்கு விசாரணைக்கு வந்தது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட, எம்.எல்.ஏ.,க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முகுல் ரஸ்தோஹி, ''தகுதி நீக்கத்தை எதிர்த்து, கர்நாடக எம்,எல்.ஏ.,க்கள் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, வரும், 19ம் தேதி விசாரிக்க வேண்டும்,'' என்றார். இதையடுத்து, நீதிபதிகள், 'தகுதி நீக்கத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, உடனே விசாரணை நடத்த வேண்டும் எனக்கோரி, உச்ச நீதிமன்ற பதிவாளரிடம், எம்.எல்.ஏ.,க்கள், மனு கொடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X