புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை

Added : ஆக 14, 2019 | கருத்துகள் (1)
Share

புவனகிரி:புவனகிரி வெள்ளாற்று உப்பு தண்ணீரால் நிலத்தடி நீர்மட்டம் பாழ்படுவதை தடுக்க தடுப்பணை கட்ட வேண்டும் என, முதல்வருக்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறிக்கு அதன் தலைவர் வழக்கறிஞர் குணசேகரன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுப்பியுள்ள மனு:தொடர் கோரிக்கை காரணமாக, கடந்த 2017 ம் ஆண்டு, புவனகிரி வெள்ளாற்றில் தடுப்பணை கட்ட, தமிழக அரசு ரூ. 54.50 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால் பணிகள் மேற்கொள்ளாமல், வெள்ளாற்றின் இரு கரைகளிலும் உள்ள பட்டாதாரர்களின் ஒப்புதலுக்காக காலதமதமாகி வந்தது.

எனவே, இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம், நிலத்தடி நீர் மட்டத்தை பாதுகாக்கும் வகையில், வெள்ளாற்றில் தடுப்பணை கட்டும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X